Monday, September 20, 2021

இதையும் படிங்க

புண்ணியம் தரும் புரட்டாசி சனி!

புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத...

புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பது எப்படி?

புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி...

நினைத்த காரியத்தில் வெற்றி பெற புரட்டாசி மாதத்தில் இந்த எளிய பரிகாரத்தை முயற்சிக்கவும்

ஒவ்வொரு மாதமும் சில ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, அதில் புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு மிக உகந்த மாதம். எனவே, இது புருஷோத்தம மாதமாக...

இன்று புரட்டாசி முதல் நாள்.. பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்..!

இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் நாம் எந்த அளவுக்கு வழிபாடுகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.09.2021

மேஷம்மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்...

எல்லாம் கோவிந்தனின் மகிமை!

மல்லிகை மாநகரில் மலர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 105-வது பிறந்த தினம் இன்று! திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு...

ஆசிரியர்

மன்னனுக்கு அருள் செய்த ஸ்ரீகூர்மநாதர் கோவில்!

திருமாலின் தசாவதாரங்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அதில் 2-வது அவதாரமான ‘கூர்ம அவதாரம்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் மற்ற அவதாரங்கள் அனைத்துமே, ஏதோ ஒரு அசுர அழிவை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டவை. ஆனால் கூர்ம அவதாரம், மற்றவர்களின் நலனுக்காக திருமாலால் எடுக்கப்பட்டது. எனவே தான் மற்ற அவதாரங்களில் இருந்து கூர்ம அவதாரம், வேறுபட்டு நிற்கிறது.

துர்வாச முனிவரின் சாபம் காரணமாக, இந்திரன் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, தேவர்கள் அனைவரும் அசுரர்களிடம் தோல்வியடையும் நிலை உருவானது. இதையடுத்து தேவர்களுக்கு, மகாவிஷ்ணு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி திருப்பாற்கடலை, மந்தார மலையைக் கொண்டு வாசுகி பாம்பை கயிறாக வைத்து கடைந்தால், அமிர்தம் கிடைக்கும். அதைப் பருகுவதால், தேவர்களின் வெற்றி சாத்தியப்படும் என்று கூறினார்.

ஆனால் பாற்கடலை கடைவதற்கு அசுரர்களின் உதவியும் தேவைப்பட்டது. இதையடுத்து தேவர்கள், அசுரர்கள் இணைந்து, திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்தார மலை சரியத் தொடங்கியது. இதையடுத்து மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, கடலுக்கடியில் சென்று மந்தார மலையை தாங்கிக்கொண்டார். இதையடுத்து திருப்பாற்கடலில் இருந்து பல பொருட்களும், அப்ரசஸ்களும், தெய்வ சக்தி பெற்றவர்களும் வெளிப்பட்டனர். இப்படி தேவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை அளிப்பதற்காக எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

தமிழ்நாட்டில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், தசாவதார சன்னிதியில் கூர்மநாதரை தரிசிக்கலாம். அதே போல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் உள்ள தசாவதார சன்னிதியிலும் கூர்மநாதர் அருள்கிறார். ஆனால் கூர்மநாதருக்கு தனிக்கோவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்கான ஒரே கோவிலாக இது மட்டுமே திகழ்கிறது. இந்த ஆலயத்தில் கூர்மநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். தாயாரின் திருநாமம், கூர்மநாயகி என்பதாகும்.

தல வரலாறு
ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணு ப்ரியா. இவள் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். ‘தான் விரதம் இருப்பது தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே. இவரால் விரதத்திற்கு பங்கம் வரக்கூடாதே’ என்று நினைத்தவள், மானசீகமாக திருமாலை வணங்கினாள். அப்போது திடீரென தம்பதியர் இடையே ஒரு நதி உருவாகி ஓடியது.

அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், “மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, ‘ஸ்வேத புஷ்கரணி’யாக மாறியது.

இத்தல இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்கிராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. இந்தத் திருத்தலம் முன்காலத்தில் ‘கூர்ம லிங்கேஸ்வரம்’, ‘பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம்’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க நினைத்தார். ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் அமைந்திருந்த கொடிமரம் அருகே சென்றவர், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டார். கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள், அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அமைவிடம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இங்கிருந்து நெடுஞ்சாலையில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

புரட்டாசி பவுர்ணமி | முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி செல்வம் மென்மேலும் பெருக..

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக மஹா விஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு பிரசித்தி...

மங்களம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்!

திருக்கண்ணமங்கை: நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவச்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.09.2021

மேஷம்மேஷம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில...

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை.. விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்!

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த ஆண்டு புரட்டாசி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.09.2021

மேஷம்மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்....

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்…

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 12 ராசிகளையும், 12 கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம். ஜோதிடம், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானது...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்!

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது,...

இலங்கைக்கு மேலும்4 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் நான்கு மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளின் இன்று (சனிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளன. பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு...

இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை...

இலங்கையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்கும் சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...

கிளிநொச்சியில் 20 -30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நிமால் அருமைநாதன் மேலும் கூறியுள்ளதாவது,...

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு!

எதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு