Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

தடைகள் தீர்க்கும் பஞ்சமி விரத வழிபாடு!

சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த ஏழுதேவியரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹிதேவி. பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை விரதம் இருந்து வணங்குவதற்கு உரிய...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.10.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்....

உங்கள் திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறதா?

இப்பொழுதெல்லாம் ஒரு திருமணம் முடிவாவது என்பது கொஞ்சம் இழுபறியாக தான் இருக்கிறது. பெண் தேடுவது என்பதும், மாப்பிள்ளை தேடுவது என்பதும் கொஞ்சம் சிக்கலான...

ஆனந்த வாழ்வருளும் ஐப்பசி நீராடல்!

மயிலாடுதுறை மயூரநாதா் திருக்கோவில் முன்பு உள்ள, காவிரி தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது சிறப்புக்குரியது. ஐப்பசி மாதத்தில் இந்த நதியில், அனைத்து புண்ணிய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.10.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும். புதியவர்களின் நட்பும் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்....

விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை…

பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று...

ஆசிரியர்

எல்லாம் கோவிந்தனின் மகிமை!

மல்லிகை மாநகரில் மலர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 105-வது பிறந்த தினம் இன்று! திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு நெகிழ்ச்சியானது. அதற்கு சான்றாக இன்றும் ஒலிக்கிறது வேங்கடேச சுப்ரபாதம்.

கர்னாடக இசையை ஆன்மாவோடுக் கலந்து கொடுத்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அதனால்தான் இவர் பாடலைக் கேட்டவர்கள் இறைவனை உணர்ந்து கொண்டதாக சத்திய சாட்சி சொல்கிறார்கள்.

அதிலும் திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு நெகிழ்ச்சியானது. அதற்குச் சான்றாக இன்றும் ஒலிக்கிறது வேங்கடேச சுப்ரபாதம். இன்றும் வெண்கலச் சிலையாக திருமலையின் பூர்ணகும்பம் பகுதியில் அமர்ந்து கோவிந்தனை நோக்கியவாறே தவத்தில் ஆழ்ந்துள்ளார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

1963-ம் ஆண்டு, அவரின் வெங்கடேச சுப்ரபாதம் இசைத்தட்டு வெளியானது. ஆரம்பத்தில் அந்தப் பாடலை ஏற்றுக்கொள்ளாத திருப்பதி தேவஸ்தானம் பிறகு அதை திருமலையில் ஒலிபரப்பவும் செய்தது. 1970-ம் ஆண்டு பஜ கோவிந்தம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற திருமால் பெருமை பாடும் இறவாப் புகழ் கொண்ட படைப்புகளை அளித்தார். 1975-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார் எம்.எஸ்.

ஐ.நா. தினத்தை முன்னிட்டு, பொதுச் செயலாளர் யூ தாண்ட் (U Thant) அவர்களூடைய சிறப்பு அழைப்பின் பேரில், எம்.எஸ்.அம்மா நியூயார்க் சென்றார். 23 அக்டோபர் 1966. ஐ.நா. ஜெனரல் அசெம்ப்ளி ஹாலில் பாடினார். மொழி தெரியாத அமெரிக்கர்களும் அப்போது வியந்தனர். புரந்தர தாசர், முத்துசாமி தீக்ஷிதர், பக்த மீரா, மகாபெரியவர், சுவாதித் திருநாள், ஜெய சாமராஜ உடையார் என மகான்கள் பலரும் எழுதிய பாடல்கள் பலவும் எம்.எஸ்.அம்மாவின் வழியே அமெரிக்கா எங்கும் பரவியது.

குறிப்பாக சிலப்பதிகாரத்தின் மீது பற்று கொண்ட எம்.எஸ். “வடவரையை மத்தாக்கி” என்ற ஆய்ச்சியர் குரவைப் பாட்டை அழகான ராகமாலிகையில் பாடி முடிக்க பலரும் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தனராம். ராஜாஜி எழுதித் தந்த ‘லார்டு மே ஃபர்கிவ் அவர் சின்…’ என்ற பாடலையும் எம்.எஸ்.பாட அமெரிக்க இசை அரங்கம் கை தட்டல் ஒலியால் அதிர்ந்தது. எல்லாம் கோவிந்தனின் மகிமை என்று நெகிழ்ந்து போனார் அந்த கோகிலவாணி.

எம்.எஸ். தனது தெய்வீகக் குரலில் பக்தி ரசம் வழிய, இந்திய இசை இழைந்தோட, துல்லிய உச்சரிப்போடு, தெள்ளிய ஸ்வர-லய பாவங்களோடு மேடையில் அமர்ந்த போதெல்லாம், சங்கீத சரஸ்வதி அவதரித்தாள் எனலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமி நமது தர்மங்களுக்கு ஆதரவாக அளித்த பாமாலைகள், பக்தி ஸ்லோகங்கள், சுப்ரபாதங்கள், ஸ்தோத்திரங்கள் அத்தனையும் சாகாவரம் பெற்று இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன. இசை விரும்பிகளுக்கு வரப்பிரசாதமாய், பக்தர்களுக்கு இசையின் வழியே பக்தி மார்க்கத்தை அடைவிக்கும் பெருமழையாய் எம்.எஸ். இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். தனது இசை வேள்வியின் வழியே இந்திய தேசத்தில் சமாதானத்தை, சமரசத்தை, பக்திப் பிரவாகத்தை உருவாக்கியவர் இந்த நவீன மீரா.

இந்திய இசையின் பிரதியாக, பக்தி மார்க்கத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கிய இசையரசி எம்.எஸ்.அம்மாவின் புகழ் திருவேங்கடமுடையான் இருக்கும் வரை நிலைத்திருக்கும். இசையரசி என்ற புகழையும் தாண்டி அவர் தனது வள்ளல் தன்மையாலும் போற்றப்படுகிறார். இசையால் தான் தேடிய செல்வங்களை ஆன்மிகப் பணிகளுக்கும் சமூகப் பணிகளுக்கும் அள்ளிக் கொடுத்தார். தமிழிசை இயக்கத்திற்குப் பக்க பலமாக நின்ற முன்னோடி கலைஞர் இவர். மேடையில் இவர் பொழிந்த தில்லானாக்கள், திருப்புகழ், சிந்து, அபங், பஜன், வர்ணங்கள், கீர்த்தனங்கள், ஜாவளிகள், விருத்தங்கள், ராகம் தானம் பல்லவிகள் எல்லாம் இசைப் பிரியர்களுக்கு ஒரு குற்றால அனுபவம் என்றே கூறலாம்.

1979-ம் ஆண்டு அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் தன்மையாலும், பத்திரிகை நடத்திய காரணத்தாலும் பொருளாதாரச் சிக்கல்களால் எம்.எஸ். – சதாசிவம் தம்பதி நெருக்கடிக்கு உள்ளானார்கள். அப்போது காஞ்சி பெரியவரும், புட்டபர்த்தி சாயி பகவானும் அவர்கள் சிக்கலில் இருந்து மீள ஆசிர்வதித்தார்கள். அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேங்கடவனின் திருவுளப்படி அன்னமாச்சார்யா கீர்த்தனைகளையும் வேறு சில பக்தி பாடல்களையும் பாட எம்.எஸ். அம்மாவை வேண்டியது. அதன்படி அவரும் பாட 1980-ம் ஆண்டு ‘ஸ்ரீபாலாஜி பஞ்ச ரத்ன மாலா’ வெளியானது. இசை உலகில் பெரும் சாதனையாக அந்த இசைத் தட்டுகள் விற்பனையானது. அதன் வழியே எம்.எஸ் அவர்களின் பொருளாதார நெருக்கடியும் தீர்ந்தது. எல்லாம் கோவிந்தன் கிருபை என்று அப்போதும் நெகிழ்ந்து போனார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

‘எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெரியும்’ என்று அடிக்கடி சொல்வார் எம்.எஸ். அதனால்தான், அந்த அடக்கத்தால் தான் ஒரு பாடகி இசைப்பிரம்மமாக மாறினார் என்றும் சொல்லலாம்.

நன்றி விகடன்

இதையும் படிங்க

அஷ்டமச் சனி மிதுன ராசிக்காரர்களை அதிகமாக பாதிக்குமா?

மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த அஷ்டமத்துச்சனி பாதிக்குமா அல்லது நன்மை தருமா என்பதை அவரவர் பிறப்பு ஜாதகத்தை வைத்தே சரியான பதிலைக் கூற முடியும். விதிவிலக்காக மிதுன...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.10.2021

மேஷம்மேஷம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க...

விநாயகருக்கு அருகம்புல் மாலை ஏன்?

விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கத்திற்கு ஒரு புராண கதை உள்ளது. அந்த கதை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அனலாசுரன்...

சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானது!

சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.10.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும்...

ஆன்மீகத்தில் பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

ஆன்மீகம் என்பது பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் தான். ஆனால் ஒரு வீட்டின் மகாலஷ்மி என்று அழைக்கப்படுபவர் பெண். ஆண்களை விட...

தொடர்புச் செய்திகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களும், சவால்களும் இருக்கத்தான் செய்கிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம். பிறந்த...

இன்று சுவையான வட்டலப்பம் செய்யலாமா?

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபமானது. சுவை நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆன்மீகத்தில் பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

ஆன்மீகம் என்பது பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் தான். ஆனால் ஒரு வீட்டின் மகாலஷ்மி என்று அழைக்கப்படுபவர் பெண். ஆண்களை விட...

மேலும் பதிவுகள்

சப்பாத்திக்கு அருமையான தக்காளி தால்

சப்பாத்தி, நாண், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தக்காளி தால். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி நிலவ சொல்ல வேண்டிய ஸ்லோகம்

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.

செல்போனை படுக்கைக்கு அருகில் வைப்பவரா நீங்கள்!

செல்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என கூறினால் அது மிகையாகாது…! நம் கைக்கு எட்டும்...

எலும்புகளை வலுவாக்கும் டபுள் பீன்ஸ் சுண்டல்

டபுள் பீன்ஸில் உள்ள அதிகளவு கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

தித்திப்பான நெல்லிக்காய் போளி

பால் போளி, தேங்காய்ப் போளி, பருப்புப் போளி தான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. நெல்லிக்காய் கிடைக்கும் சீஸனில் இந்தப் போளியை செய்து சுவைக்கலாம்.

சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த...

பிந்திய செய்திகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

துயர் பகிர்வு