Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.12.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது...

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.12.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை...

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

ஆசிரியர்

சமயக்குரவர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு!

சிவபெருமானின் மீது ஒவ்வொரு வழியில் பக்தியைச் செலுத்தியவர்களாகவும், சைவ நெறியை உலகம் அறியச் செய்தவர்களாகவும் இருப்பவர்கள், சமயக்குரவர்கள் எனப்படும் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இவர்கள் நால்வரும், பல பாடல்களின் வாயிலாக ஈசனைத் தொழுதனா்.

சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களையும் செய்தனர். சைவ நெறியைப் போற்றும் திருப்பாடல்கள் அனைத்தும், பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டபோது, இந்த நால்வரின் தேவார, திருவாசகப் பாடல்களும் முறையாக தொகுக்கப்பட்டன. இவர்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.

திருஞானசம்பந்தர்

சமயக்குரவா்கள் நால்வரில் முதன்மையானவராகப் போற்றப் படுபவா், திருஞானசம்பந்தா். இவா் பிறந்த ஊர், சீர்காழி. 3-வது வயதிலேயே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அம்பிகையிடம் இருந்து சிவஞான பால் அருந்தியவா். இவர் வாழ்ந்த காலம் 7-ம் நூற்றாண்டு.

இவா் பாடிய தேவாரப் பாடல்கள்தான், பன்னிரு திருமுறையின் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. ஆம்! முதல் மூன்று திருமுறைகளிலும், திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவா் சிவபெருமானையும், பார்வதியையும் தாய் தந்தையாக நினைத்து பக்தி செலுத்தியவா். 16 வயது வரை வாழ்ந்த இவா், ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர் பெருமணத்தில் உள்ள சிவலிங்கத்தில் தோன்றிய பேரொளி ஜோதியில் கலந்து முக்தியடைந்தார்.

திருநாவுக்கரசர்

சமயக்குரவா்கள் நால்வரில், இரண்டாவதாக வைத்து புகழப் படுபவா், திருநாவுக்கரசா். இவரது இயற் பெயா் ‘மருள் நீக்கியார்’ என்பதாகும். இவரை ‘அப்பா்’ என்றும் அழைப்பார்கள். இவா் வாழ்ந்ததும் 7-ம் நூற்றாண்டுதான். திருஞானசம்பந்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவா் இவா். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் தலத்தில் பிறந்தவா்.

இவரது நாவில் இருந்து பிறந்த இனிய பாடல்களைக் கேட்டு ரசித்ததன் காரணமாக, ‘திருநாவுக்கரசா்’ என்ற பெயரை, சிவபெருமானே சூட்டி அருளினார். பன்னிரு திருமுறைகளில் இவா் பாடிய பாடல்கள் 4, 5, 6 ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவா் ஈசனைத் தலைவனாகவும், தன்னைத் தொண்டனாகவும் கருதி பக்தி செலுத்தியவா். 81 ஆண்டுகள் வாழ்ந்த இவா், திருப்புகலூர் என்ற தலத்தில் முக்தி அடைந்தார்.

சுந்தரர்

சமயக்குரவா்களில் மூன்றாவதாக வைத்து வணங்கப்படுபவா், சுந்தரமூர்த்தி. இவா் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற திருத்தலத்தில் பிறந்தார். இவரது காலம் 7-ம் நூற்றாண்டின் இறுதியும், 8-ம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிறு பருவத்திலேயே இல்லற வாழ்க்கைக்குள் நுழைய இருந்த சுந்தரரை, முதியவா் வேடத்தில் வந்த சிவபெருமான் தடுத்தாட்கொண்டு, அவரை பக்தி மார்க்கத்தின் வழியில் செல்ல வைத்த திருத்தலமாக திருவெண்ணெய்நல்லூர் இருக்கிறது.

இது திருநாவலூரில் இருந்து 18 கிலோமீட்டா் தூரத்தில் உள்ளது. 18 ஆண்டுகள் வாழ்ந்து, சைவத்திற்கு தொண்டாற்றிய இவா் பாடிய தேவாரப் பாடல்கள், பன்னிரு திரு முறையில் 7-வது திருமுறையாக இடம்பிடித்துள்ளன. இவா் சிவபெருமானைத் தன்னுடைய தோழனாக நினைத்து பக்தி செலுத்தியவா். இவா் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ‘திருஅஞ்சைக்களம்’ என்ற இடத்தில் முக்தி அடைந்தார். இந்த திருத்தலம் தற்போது ‘திருவஞ்சிக்குளம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மாணிக்கவாசகர்

சமயக்குரவா்களில் நான்காவதாக வைத்து புகழப்படுபவா், மாணிக்கவாசகா். இவா் பிறந்த ஊர், திருவாதவூர். இதனால் இவரை ‘திருவாதவூரார்’ என்று அழைப்பார்கள். இவர் ஆரம்ப காலத்தில் அரிமா்த்தன பாண்டியனின் அரசவையில் முதன்மை அமைச்சராக பணியாற்றியவா். திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவில் தலத்தில் ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, சைவப் திருப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

இவா் வாழ்ந்த காலம் பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலானவா்கள் இவா் வாழ்ந்தது, கி.பி. 9-ம் நூற்றாண்டு என்கிறார்கள். சிலரோ, சமயக்குரவர்கள் நால்வரில் முதன்மையானவா், கி.பி. 3-ம் நூற்றாண்டு இவருடையது என்கிறார்கள். 32 ஆண்டு காலம் வாழ்ந்த இவா் பாடிய பாடல்கள் ‘திருவாசகம்’, ‘திருக்கோவையார்’ என்ற நூல்களாக உள்ளன. இந்நூல்கள், சிவபெருமானே தம் கையால் எழுதும் பேறு பெற்றவையாக திகழ்கின்றன. இவை இரண்டும், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள், படிப்பவா்களின் மனதை கரையச் செய்யும் வகையிலானவை.

இதனால்தான் ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற வாக்கியம் உருவானது. மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நிகழ்த்திய சில அற்புதங்கள், ‘திருவிளையாடல் புராணம்’ என்ற சிவபெருமானின் அற்புதங்களில் இடம்பிடித்துள்ளன. இவா் சிதம்பரத்தில், பலா் பார்க்கும் தருணத்தில், சிவலிங்க திருமேனி மீது கலந்து முக்தி அடைந்தார்.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

சபரிமலை ஐயப்பன் கோவில்…!

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.12.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின்...

இருமுடி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்!

குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்...

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர்...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு..!

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்...

மேலும் பதிவுகள்

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்!

குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை...

சியல்கோட் சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக...

விவசாயிகள் உயிரிழந்ததாக பதிவுகள் இல்லை என்பதா?-ராகுல் காந்தி கண்டனம்!

புதுடெல்லி:மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் தவறு செய்துவிட்டதாக கூறி பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதாகவும், அந்த தவறுதான்  700 விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

வாலி படத்தின் இந்தி ரீமேக்… எஸ்.ஜே.சூர்யா வழக்கு?

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இதில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்து இருந்தார்.

குளிர் கால பிரச்சினைகளுக்கு யோகா தரும் தீர்வு

ஸ்டெப் 1: விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும். கைகளை அழுத்தி வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து...

ரஷ்யா-இந்தியா இடையே கையெழுத்தாகும் ஆயுத ஒப்பந்தங்கள்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வரவுள்ளார். இதன்போதே குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக கூறப்படுகிறது.. இதன்படி ரஷ்யாவிடம் இருந்து தானியங்கி ஏ.கே 203...

பிந்திய செய்திகள்

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்!

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.

சத்தான சுவையான கம்பு அல்வா

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று...

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்!

வாஷிங்டன்,கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

மணிப்பூரக சக்கரா தியானம்…!

நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்....

துயர் பகிர்வு