Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.12.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது...

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.12.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை...

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

ஆசிரியர்

ஆனந்த வாழ்வருளும் ஐப்பசி நீராடல்!

மயிலாடுதுறை மயூரநாதா் திருக்கோவில் முன்பு உள்ள, காவிரி தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது சிறப்புக்குரியது. ஐப்பசி மாதத்தில் இந்த நதியில், அனைத்து புண்ணிய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த மாதத்தில் இங்கு நீராடுவதை `துலா ஸ்நானம்’ என்கிறார்கள்.

கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடு பவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். அதற்காகவே அனைத்துப் புண்ணிய நதிகளும், காவிரியில் வந்து உறைகின்றன.

ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே, ‘துலா ஸ்நானம்’ வழிபாடாகும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் காவிரியில் நீராடுவதாக ‘துலாக் காவிரி புராணம்’ கூறுகிறது. முடவன் முழுக்கு எனப்படும் கார்த்திகை மாத முதல் தேதியில், மயூர நாதர் ஆலயத்தில் இருந்து அம்மையப்பனும் அலங்கார ரதத்தில் துலாக்கட்டத்தில் எழுந்தருள்வார். அப்போது காவிரியில் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி நடைபெறும். அந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதனால் நம்முடைய தலைமுறை பாவங்களும், கர்ம வினைகளும், வம்ச சாபம், பெண் சாபம் யாவும் அகலும் என்கிறார்கள்.

புண்ணிய நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப் படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும், ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை உடனாய மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். அதோடு இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி உடனாய சக்தி புரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தால் சிறப்பான பலனைப் பெறலாம்.

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால் ‘மயிலாடுதுறை’ என்ற பெயர் உண்டானது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்-பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூரத் தாண்டவ திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.

கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்து வேறுபாடு நீங்கி தம்பதியரிடையே ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இத்தல அம்மனின் திருநாமம் ‘அபயாம்பிகை’ என்பதாகும்.

அமைவிடம்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

சபரிமலை ஐயப்பன் கோவில்…!

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.12.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின்...

இருமுடி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்!

குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை...

தொடர்புச் செய்திகள்

ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்!

அம்பாளை வழிபடுவதற்கான சிறப்புமிக்க தினங்களில் ஒன்று, ஆடிப்பூரம். இந்த நல்ல நாளில், அம்மன் கோவில்கள் அனைத்திலும் அம்பாளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்படும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்தக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 954 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக்...

75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே புலிகள் தோற்கடித்தனர்!

மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை...

சியல்கோட் சம்பவம்: இதுவரை 124 பேர் கைது, 900 ஊழியர்களிடம் விசாரணை!

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் வெள்ளிக்கிழமையன்று ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்...

வவுணதீவு சம்பவத்தை புலிகள் மீது சுமத்த ஆலோசனை வழங்கியது யார்?

வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இதற்கமைய நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (திங்கட்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை!

வாஷிங்டன்:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் செவ்வாய்கிழமை காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கிரெம்ளின் மற்றும் வாஷிங்டன் தெரிவித்துள்ளன.

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு