Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.01.2022

மேஷம்மேஷம்: மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...

பரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள...

தமிழில் சிவ சித்தேஸ்வர அஷ்டகம்!

சிவசக்தியை மனதிலும், கங்கை அன்னையை தலையிலும் சுமந்த ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2022

மேஷம்மேஷம்: மேஷம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்...

இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம்… இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ விரத வழிபாடு. இன்று சிவன்...

கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்!

திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.

ஆசிரியர்

பாவம் போக்கும் பஞ்ச பிரம்ம தலங்கள்!

உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி என்ற மரங்களை உரசி, அதன் மூலம் யாகத் தீயை உருவாக்கினார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெருவெடிப்பில், பூமியில் இருந்து நீர் வெளிப்பட்டு, பெருக்கெடுத்து ஓடியது. அதுவே ‘ஆரணி நதி’ ஆகும். இந்த நதிக்கரை ஓரத்தில், சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களை குறிக்கும் வகையில் 5 ஆலயங்கள் தோன்றின. இவை ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.

கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. நாம் ஆரணிக் கரையோரம் உள்ள பஞ்ச பிரம்ம தலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

அரியத்துறை
சென்னை – கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது, கவரப்பேட்டை. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை இருக்கிறது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் – வரமூர்த்தீஸ்வரர், அம்பாள் – மரகதவல்லி. உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது.

ஆரணி பெரியபாளையம்
சென்னையில் இருந்து வடக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆரணி. இங்குள்ள பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘வாமதேவபுரம்’ ஆகும். பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரிய ஆலயம் இதுவாகும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலின் மூலவர், சுயம்பு மூர்த்தி ஆவார். மூலவர் பெயர்- பிச்சாலேஸ்வரர், அம்பாள் பெயர் – மரகதவல்லி. இங்குள்ள சிவலிங்கத்தின் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருப்பது விசேஷம்.

ராமகிரி
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுருட்டப்பள்ளி. இந்த ஊரைத் தாண்டியதும் ராமகிரி உள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருக்காரிக்கரை’ என்பதாகும். மூலவர் பெயர் வாலீஸ்வரர். மரகதாம்பாள் என்பது அம்பாள் திருநாமம். சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய ஆலயம் இது. மூலவர் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருக்கிறாா்.

கருங்காலி
சென்னை அருகே உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்தான் கருங்காலி திருத்தலம் இருக்கிறது. இது பழங்காலத்தில் ‘நைமிசான்யம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய கோவில் இங்கு உள்ளது. ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம், சிந்தாமணீஸ்வரர். அம்பாள் பெயர் சிவகாமவல்லி. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால், இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடலோடு நதி கலக்கும் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது.

சுருட்டப்பள்ளி
சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை...

ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்..!

இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2022

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும்....

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.

காரியங்கள் வெற்றியாகும் பரிகாரம்

நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.

நாளை தைப்பூசம்… விரதம் இருந்தால் வரம் தருவான் வடிவேலன்…!

தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது ‘தைப்பூசம்’ தான். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

ப்ரோ டாடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று ஒரு படம்...

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்!

கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி...

மேலும் பதிவுகள்

மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்!

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது...

பொங்கல் திருநாள் அன்று நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..

சுகத்தைக் கொடுக்கும் சூரியனே போற்றி! செல்வம் வழங்கும் செங்கதிரே போற்றி! உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி! நலங்களை...

இலங்கையில் பாதுகாப்பு படை,பொலிஸார் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது நல்லதல்ல!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீதி கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்...

இலங்கையில் தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான்...

இலங்கையில் சமையல் எரிவாயு கொள்கலன் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

சமையல் எரிவாயு கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில் நிதியமைச்சர் பசில்...

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது!

புதுடெல்லி:பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். 

பிந்திய செய்திகள்

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை...

எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள...

விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் மரணம்

சபரிமலை ஐயப்பனை பற்றி தமிழிலும், மலையாளத்திலும் பல பக்தி பாடல்கள் பாடிய இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் மரணம் அடைந்தார். பிரபல பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர்...

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவிற்கு இதுதான் காரணமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நேற்று இரவு அவருடைய மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார் இந்த பிரிவிற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி  சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் ;லேசான அறிகுறிகளுடன் தனக்கு  கொரோனா தொற்று இருப்பது...

துயர் பகிர்வு