Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

ஆசிரியர்

விஷ்ணுவின் கருணையைப் பெற உதவும் ரமா ஏகாதசி விரதம்!

ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடத்தில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘ரமா’ ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார். அவர் சொன்ன கதையை இங்கே பார்ப்போம்.

புராண காலத்தில் முசுகுந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்ந்தனர். ஆகையால், மன்னனின் உத்தரவுகளை எதிர் கேள்வியின்றி மக்கள் நிறைவேற்றி வந்தனர். ‘நாட்டு மக்கள் அனைவரும் தவறாது ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்பதும், நாட்டு மக்களுக்கு முசுகுந்த மன்னன் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று. அதை மக்களும் சிரத்தையுடன் செய்து வந்தனர்.

முசுகுந்தனுக்கு, சந்திரபாகா என்று ஒரு மகள் இருந்தாள். அவளை, சந்திரசேனன் என்ற மன்னனின் மகன் சோபனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார். ஒரு முறை சந்திரபாகா தன்னுடைய கணவருடன், தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி (ரமா ஏகாதசி) வந்தது. தன்னுடைய நாட்டில் வசிக்கும் அனைவரும் அந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு. எனவே சோபனும், அந்த விரதத்தை மேற்கொள்ளும் நிலை உருவானது. ஆனால் விரதம் இருந்தால், அவனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற நிலை இருந்தது.

தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, அவனை ஏகாதசி விரதம் முடியும் வரை வேறு எங்காவது சென்று தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினாள். அதற்கு சோபன் மறுத்து விட்டான். “விரதம் இருந்தால், எனக்கு இறப்பு உறுதி என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு தேசத்தில் போய் தங்கியிருந்தால், விரதத்திற்கு பயந்து போய்விட்டதாக அனைவரும் எள்ளி நகையாடுவர். எனவே விரத்தை நானும் மேற்கொள்கிறேன்” என்று கூறினான்.

அதன்படியே கார்த்திகை தேய்பிறை ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். பசியும், தாகமும் அவனை மிகவும் வருத்தியது. அன்றைய இரவு அவனுக்கு மிகவும் வேதனையாக கடந்தது. மறுநாள் பூஜைக்குப் பிறகே உணவு சாப்பிட முடியும். ஆனால் சூரியன் உதிக்கும் முன்பாகவே சோபனின் உயிர் பிரிந்துவிட்டது. இதை அறிந்த முசுகுந்த மன்னன், சோபனின் உடலை நதியில் விட்டு விட்டார். பின்னர் மகளிடம், “உடன்கட்டை ஏற வேண்டாம். ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் முடி. விஷ்ணுவின் கருணை உன் மீது பதியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.

ஆனால் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக, அவனது உடல் உயிர்பெற்றது. அவன் விஷ்ணுவின் கருணையால், அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த, தேவபுரம் என்னும் நகரத்தின் அபதியாக ஆனான். தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலைஉயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில், அழகிய ஆடை ஆபரணங்களுடன் வீற்றிருந்தான், சோபன். கந்தர்வர்களும், அப்சரஸ்களும், நாட்டியமாடி, இசைபாடி சோபனின் புகழ் பாடினர்.

அதே நேரம் சோபன், தான் இருந்த ஏகாதசி விரதத்தை தெய்வ பக்தி இல்லாமல் செய்த காரணத்தால், அவன் அதிபதியான நகரம் நிலையற்ற தன்மை கொண்டதாக இருந்தது. இந்த நிலையில் ஒரு முனிவரின் மூலமாக, தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, தான் மேற்கொண்ட ஏகாதசி விரதத்தின் பலனைக் கொண்டு, சோபன் ஆளும் நகரத்தை நிலையானதாக மாற்ற உறுதிகொண்டாள். அதன்படியே, தன்னுடைய எட்டு வயது முதல் இதுவரை மேற்கொண்டு வந்த ஏகாதசி விரதங்களின் பலனைக் கொண்டு, சோபனின் நகரத்தை பிரளய காலம் வரை அழியாதபடிக்கு நிலையானதாக மாற்றினாள். பின்னர், தன்னுடைய கணவனுடன் சேர்ந்து அந்த நகரத்தின் ராணியாக வீற்றிருந்து இன்புற்று வாழ்ந்தாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்தது, கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம்

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில்...

ஆடி மாதத்தில் புது வீடு பால் காய்ச்சலாமா

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால்...

வெள்ளருக்கன் பூ தரும் அதிஷ்டம்

வெள்ளருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் வீட்டில் வெள்ளருக்கு விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம்....

இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்த திருவிழா 23ஆம் திகதி தொடங்கி அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நடக்கிறது. 4ஆம் திகதி சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு...

நாசர் புகழ்ந்தஇலங்கை தமிழ்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார்.

தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு