Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

பரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள...

தமிழில் சிவ சித்தேஸ்வர அஷ்டகம்!

சிவசக்தியை மனதிலும், கங்கை அன்னையை தலையிலும் சுமந்த ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2022

மேஷம்மேஷம்: மேஷம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்...

இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம்… இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ விரத வழிபாடு. இன்று சிவன்...

கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்!

திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.01.2022

மேஷம்வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். ரிஷபம்உடல்...

ஆசிரியர்

சபரிமலை ஐயப்பன் கோவில்…!

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர்.

ஐயப்பர் வரலாறு:

மகிஷாசுரனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கோபம் கொண்டு, அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வரங்களைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தாள். இதைக் கண்ட சிவபெருமானும், விஷ்ணுவும் மகிஷியை அழிக்க வேண்டி, விஷ்ணு மோகினி அவதாரமெடுக்க, சிவபெருமானுக்கும், விஷ்ணுவான மோகினிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனைத்து தெய்வாம்சங்களும் அமைந்திருந்தது. சிவனும், விஷ்ணுவும் காட்டில் ஒரு மரத்தடியில் குழந்தையை அதன் கழுத்தில் ஒரு மணி மாலையை அணிவித்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் இறைவனின் லீலை.

இதற்கிடையே கேரளாவில் பந்தள மகாராஜா ராஜசேகரனும், அவனது மனைவியும் குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். அவர்கள் இருவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் பந்தள மகாராஜா காட்டிற்கு வேட்டைக்கு வந்தார். அப்போது காட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. மகாராஜாவுக்கோ சந்தேகம், காட்டிலிருந்து எப்படி குழந்தை சத்தம் வருகிறது என்று தேடினார். அப்போது மரத்தடியில் இருந்த குழந்தையைப் பார்த்து அருகில் சென்றார். அங்கே ஜொலித்துக் கொண்டிருந்தார் ஐயப்பர்.

பந்தள மன்னனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தையில்லையே என்ற இறைவனை பிரார்த்திர்த்தது வீண் போகவில்லை. அந்த பகவான் தான் நமக்கு இந்த குழந்தையை கொடுத்திருக்கிறார் என்று ஆசையோடும், அன்போடும் அரண்மனைக்கு எடுத்து வந்தார். மகாராணியும் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள். ஜோதிடர்கள் இந்த குழந்தை தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்று கூறினார். கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பந்தள மகாராஜா. நாளடைவில் மகாராணியும் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். மகாராஜவுக்கும், மகாராணிக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. மணிகண்டன் வந்த நேரம் தான் நமக்கு இன்னொரு குழந்தை கிடைத்திருக்கிறது என்று எண்ணினர்.

மந்திரியின் சதி:

அரண்மனையில் சிறப்பாக வளர்ந்து வந்த மணிகண்டனுக்கு பந்தள மகாராஜா பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார். இதையறிந்த மந்திரி எங்கே மணிகண்டன் அரசரானால் தனக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயந்து சதி செய்தான். மகாராணியிடம் சென்று உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க, மன்னர் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யவிருக்கிறார். அதனால் ராஜராஜனுக்குப் பதிலாக மணிகண்டன் அடுத்த அரசராகி விடுவான் போலிருக்கிறது என்று ராணியின் மனதில் விஷத்தை விதைத்தான்.

புலிப்பால் கொண்டு வரச்சென்ற ஐயப்பர்:

மந்திரியின் சூழ்ச்சியால் ராணி தனக்கு தீராத வயிற்று வலி வாட்டுகிறது என்றும், அரண்மனை வைத்தியரைக் கொண்டு இதற்கு புலிப்பால் கொண்டு வந்தால் குணமாக்க முடியும் என்று சொல்ல வைத்தாள். சூழ்ச்சியை அறிந்து கொண்ட 12 வயது பாலகனான ஐயப்பன் காட்டிற்கு சென்றார். காட்டிற்குள் வந்து கொண்டிருந்த ஐயப்பனை தடுத்து நிறுத்தினாள் மகிஷி. வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியுடன் சண்டையிட்டு இறுதியில் மகிஷியை அழித்தார்.
மகிஷியின் அழிவால் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்திரன் புலியாக மாறினார். அவர் மீது அமர்ந்தார் ஐயப்பர். தேவர்களும் புலிப்படையாக மாறினர். ஐயப்பர் புலி மேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி வந்தார். ஊருக்குள் புலிகள் கூட்டமாக வருவதைக் கண்ட மக்களும், மகாராணியும் அஞ்சினர். மகாராணியும், மந்திரியும் தங்களது தவறை உணர்ந்து ஐயப்பனிடம் மன்னிப்புக் கோரினர்.

ஐயப்பனும் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், நான் பூமியில் எதற்காக பிறந்தேனோ அந்த வேலை முடிந்துவிட்டது. அதனால் நான் தேவலோகம் செல்கிறேன் என்றார். மகனைப் பிரியப் போகிறோமே என்று மனமுடைந்த பந்தள மன்னன் ஐயப்பனிடம் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக ஒரு கோயில் கட்ட விரும்புகிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று கேட்டான். ஐயப்பர் ஒரு அம்பை எடுத்து  எய்தார். இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கே கோயில் கட்டுங்கள் என்றார். அந்த அம்பு சபரி மலையில் போய் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், பக்கத்தில் மாளிகைபுறத்தம்மனுக்கும் கோயில் கட்டுங்கள் எனக் கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டனின் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் பந்தள மன்னர் ஊண் உறக்கம் இல்லாமல் தானே நேரடியாக மேற்பார்வை கொண்டு பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். அங்கு ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து தரிசித்து ஐயப்பனின் அருளைப் பெறுகின்றனர்.

சபரிமலை கோயில்:

ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.

உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

மஞ்சமாதா கோயில்:

மகிஷியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்…’ என வேண்டினாள்.

ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்…’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.

பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.

பம்பை நதி:

ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த பம்பா நதியில் நீராடிய பின்பே சபரிமலை ஏறுகின்றனர். கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது. தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவதரித்த இடம் இதுதான்.  இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா, மாவட்டங்களின் வழியாக பாய்ந்தோடி வேம்நாட்டு ஏரியில் கலக்கிறது.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்..!

இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2022

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும்....

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.

காரியங்கள் வெற்றியாகும் பரிகாரம்

நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.

நாளை தைப்பூசம்… விரதம் இருந்தால் வரம் தருவான் வடிவேலன்…!

தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது ‘தைப்பூசம்’ தான். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.01.2022

மேஷம்மேஷம்: மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...

தொடர்புச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்படுகிறது!

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை, ஐப்பசி மாத பூஜைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும், 17ஆம் திகதி முதல் பக்தர்கள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்!

கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி...

இந்தியா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக பல ஆளில்லா விமானங்களை அனுப்ப பாகிஸ்தான் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: முக்கிய சில முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. கடினத்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது...

மேலும் பதிவுகள்

கொரோனா ஊரடங்கு… 2021-ம் ஆண்டில் பிரபலமான உடற்பயிற்சிகள்!

இரண்டு வருடங்களாக உலகை ஸ்தம்பிக்க வைத் திருக்கும் கொரோனா, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் அதிக...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின்...

இலங்கையின் நலன்கள்,எதிர்காலம் குறித்து அரசாங்கம் கவனிப்பதில்லை!

இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற...

கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்...

“தேர்வுக்கு தயாராவோம்” நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடி அழைப்பு!

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு...

இலங்கையில் எந்நிலையிலும் நாட்டரிசி 105 ரூபாயை விட அதிகரிக்காது!

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மெலும் தெரிவித்துள்ள அவர், “வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில், இந்தியாவிலிருந்து இரண்டு...

பிந்திய செய்திகள்

மோடியின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிரிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும்!

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு...

அபுதாபி தாக்குதலின் பின் சவுதி தலைமையிலான கூட்டுப்படை யேமனில் வான் வழித்தாக்குதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுத்த ஒரு நாள் கழித்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி யேமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல்களை...

யாழ்.நாவற்குழி பகுதியில் கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

துயர் பகிர்வு