
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம் கூட நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். கோதானம் செய்வது, கோமாதா வழிபாடு செய்வது, கோ பூஜை செய்வது, கோமாதாவிற்கு தானம் செய்வது போன்ற விஷயங்களை நம் வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செய்து வருகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் குலம் தழைக்கும் என்பது நியதி! அப்படிப்பட்ட இந்த பால் அடிக்கடி வீட்டில் பொங்கினால் என்ன நடக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
அடிக்கடி பால் பொங்குவது என்பது நம்முடைய அஜாக்கிரதையால் நிகழ்வது ஆகும். பால் பொங்கும் வரை கூட நம்முடைய பொறுமை அங்கு இல்லை எனும் பொழுது நம் வாழ்வில் எப்படி பொறுமையைக் கடைபிடிப்போம்? பொறுமை இழக்கும் ஒருவரால் நிச்சயம் அவ்வளவு சுலபமாக வெற்றியை அடைந்து விட முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் ஒரு விஷயமாகவும் இந்த பால் பொங்கும் நிகழ்வு இருந்து வருகிறது.
பாலை வைத்துவிட்டு அவ்வளவு நேரம் காத்திருப்போம், ஆனால் பால் கொஞ்சம் கூட அசைந்து இருக்காது, ஆனால் பால் தான் பொங்க வில்லையே என்று சற்று திரும்பியவுடன், பால் பொங்கி வழிந்து விடும். இது எல்லோருமே நம்முடைய வாழ்நாளில் ஏதோ ஒரு நாள் நிச்சயம் அனுபவித்திருப்போம். இதை எப்போதோ, என்றோ ஒரு நாள் நிகழும் நிகழ்வாக இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில இல்லங்களில் தொடர்ந்து இது போல் பால் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும்.
இப்படி அடிக்கடி ஒரு வீட்டில் பால் பொங்கி வழிந்தால் அவ்வளவு நல்லது அல்ல என்கிறது ஆன்மீகம். பால் காய்ச்சி அடிக்கடி கெட்டுப் போவதும், இது போல பொங்கி வழியும் போதும் அங்கு துர்சக்திகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தமாகும். பாத்திரம் சுத்தமாக இல்லாத காரணத்தினால் கூட, சில சமயங்களில் பால் திரிந்து விடுவது உண்டு. பால் எக்ஸ்பைரி ஆனாலும் பால் திரிந்து விடுவது உண்டு ஆனால் இவை இரண்டும் இல்லாமல் அடிக்கடி பால் திரிந்து போகும் சம்பவம் உங்கள் இல்லத்தில் நிகழ்ந்தால் அங்கு துர் சக்திகள் ஆதிக்கம் செலுத்துகிறது என்று அர்த்தமாகிறது.
அதே போல என்னதான் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும், அடிக்கடி பால் பொங்கி வழிந்து விடுவதும் இதனால் அடுப்பை துடைப்பதும் ஆக இருந்து கொண்டிருந்தால் அங்கும் துர்சக்திகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இடங்களில் அடிக்கடி சண்டையும், சச்சரவுகளும், பிரச்சினைகளும் தலைதூக்கும். தேவையே இல்லாமல் கணவன், மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவது, கைகலப்பு நடப்பது அல்லது வம்பு வழக்குகளில் சிக்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும்.
அப்படி எதுவும் இல்லை என்றாலும் மனதில் ஏதோ ஒரு குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். ஏதோ ஒரு கேள்விக்கான விடை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இப்படி மன உளைச்சல் அதிகரிக்க, உடல் ஆரோக்கியமும் சீர்கெடும். எனவே அடிக்கடி பால் விஷயத்தில் தவறு நடந்தால் உங்கள் குல தெய்வத்திற்கு ஒருமுறை பூஜை செய்து விடுங்கள் நல்லது நடக்கும்.
நன்றி | மாலை மலர்