நிம்மதியாக இருந்த குடும்பம் திடீரென்று நிலைகுலைந்து போக காரணமாக இருக்கும் இந்த எதிர்மறை ஆற்றலை தடுக்க மிக மிக சுலபமான ஒரு தாந்திரிக முறை உள்ளது.
சிறிய மண் பானை அல்லது மண் அகல் விளக்கு எல்லோர் வீட்டிலும் இருக்கும். அதை வேண்டுமென்றாலும் பரிகாரத்திற்க்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் கொஞ்சமாக 1 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயத்தைப் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து விடுங்கள்.
ஏதாவது ஒரு அலமாரியின் மேலே யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்தால் கூட பரவாயில்லை.
அது அப்படியே இருக்கட்டும். தினம்தோறும் லேசாக அதன்மேலே தண்ணீரை மட்டும் தெளித்து வர வெந்தயம் முளை விடத் தொடங்கும்.
ஒரு வாரம் முழுவதும் அந்த மண் பாண்டத்தில் வெந்தயம் அப்படியே இருக்கட்டும்.
எவ்வளவு தூரம் வெந்தயம் முளைத்து வந்தாலும் சரி, ஈரப்பதத்தோடு முளைத்து வரக்கூடிய வெந்தயமானது உங்களுடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை வினைகளையும் ஆற்றலையும் கண்திருஷ்டியையும் உடனடியாக தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும்.
திடீரென்று உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவு மன நிம்மதி இல்லை என்றால் இதை வைத்துப் பாருங்கள்.
நிச்சயமாக உங்களுக்கு வந்த கஷ்டங்கள் அனைத்தும் ஒரு சில நாட்களிலேயே காணாமல் போய்விடும்.
வாரத்தில் ஒருநாள் பழைய வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் அந்த மண் அகல் விளக்கில் புதிய வெந்தயத்தை கொட்டி வைத்தால் உங்கள் வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும்.
நன்றி ஆன்மீக மலர்