Sunday, June 26, 2022

இதையும் படிங்க

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் இன்று (25) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நேற்று(24)...

சீன நகரில் டெஸ்லா காருக்கு தடை

சீனா தலைமையின் முக்கிய வருடாந்த கூட்டம் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்கள் இடம்பெறுவதால் சீனத் துறைமுக நகரான பெய்டெய்ஹேவுக்கு டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் முன்னேறி செல்லும் ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு கிராமங்களைக் கைப்பற்றி ரஷ்யப் படை முன்னேற்றம் கண்டுள்ளது. இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 4 பேர்...

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது...

ஆசிரியர்

யார் எந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா

பெரும்பாலும் வெள்ளி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் காலில் அணியும் கொலுசு மட்டுமே ஆகும்.

வெள்ளியில் கொலுசு மட்டும் கிடையாது, ஏகப்பட்ட பூஜை பாத்திரங்களும், சமையல் பாத்திரங்களும் கூட விற்பனைக்கு உண்டு. அது மட்டும் அல்லாமல் வெள்ளியின் விலை குறைவு என்பதால் வெள்ளி வாங்குவது சாதாரண மக்களாலும் முடிகிறது.

தங்கத்தை விட வெள்ளிக்கு ஒரு சில சக்திகள் அதிகம் உண்டு. அவை என்னென்ன? யார் எந்த விரலில் வெள்ளி நகைகளை அணிய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

வெள்ளி என்கிற உலோகத்தால் ஆன எந்த ஒரு பொருளும் பெண்கள் தங்களுடைய விரல்களில் அணிந்து கொண்டால் அது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

பெண்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் உடல் குளிர்ச்சி அடையும், இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விரைவாகவே மீண்டு விடுவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு.

ஜாதக ரீதியாக எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும், கையில் வெள்ளி மோதிரம் அணிந்து இருந்தால் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவாகவே வெளிப்பட்டு விடலாம்.

வெள்ளி மோதிரத்தை மோதிர விரல் அல்லது நடுவிரலில் அல்லது ஆள்காட்டி விரல் ஆகிய விரல்களில் அணிந்து கொள்ளலாம்.

மிகக் குறைவான விலைகளில் விதவிதமாக கிடைக்கக் கூடிய வெள்ளி மோதிரங்கள் அணியும் பொழுது உடம்பின் உஷ்ணம் அதிலேயே தெரிய ஆரம்பிக்கும். உடம்பில் பித்தம் அதிகம் இருந்தால் அல்லது உப்புக் காற்றை அதிகம் சுவாசிப்பவர்களுக்கு விரைவாகவே வெள்ளி கறுத்துவிடும்.

வெள்ளி கறுகாமல் புத்தம் புதியதாக அப்படியே இருந்தால் உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசிகள் என்றும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நில ராசிகள் என்றும், மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள் என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசிகள் என்றும் ஜாதக ரீதியாக கணிக்கப்படுகிறது. இதில் நெருப்பு ராசியை சார்ந்த பெண்கள் மோதிர விரலிலும், நில மற்றும் நீர் ராசியை சார்ந்தவர்கள் நடுவிரலும், காற்று ராசியை சார்ந்தவர்கள் ஆள்காட்டி விரலிலும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

சுக்கிர பலம் பெற்றவர்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் பன்மடங்கு பெருகும். ஜாதக ரீதியாக சுக்கிரன் ஒருவருக்கு சுக போகத்தை கொடுக்கக் கூடியவர். காதல் விவகாரங்களில் தோல்வி அடையாமல் இருக்க வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

வெள்ளியிலிருந்து வெளி வரும் ஒரு சில மின் அலைகள் உடலில் இருக்கும் நரம்புகள் வழியே சென்று உடல் உள் உறுப்புகளுக்குள் இருக்கும் நோய்களையும் குணப்படுத்துகிறது. திருமணமான பெண்கள் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரலில் வெள்ளி மெட்டி அணிந்து கொண்டால் விரலில் இருக்கும் நரம்புகள் வழியே கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும் என்பது அறிவியல் உண்மையாகும் எனவே வெள்ளி மோதிரம் அணிவது என்பது சாதாரண விஷயம் அல்ல!

வெள்ளி மோதிரம் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அணிந்து கொள்ளலாம். வெள்ளியில் யானைமுடி சேர்த்து செய்த மோதிரங்களும் விற்பனைக்கு உண்டு. அவற்றை உங்களுடைய ஜாதகத்தின் படி ஜோதிடர்களிடம் கேட்டு அணிந்து கொண்டால் நிறையவே நல்ல பலன்கள் ஏற்படும். வெள்ளியாலான டாலர், வெள்ளியாலான கீ செயின் பயன்படுத்துபவர்களுக்கும் சுக்ர யோகம் உண்டு. குறிப்பாக மீன் சின்னம் பொறித்த வெள்ளி கீ செயின்கள் பீரோவில் இருந்தால் கட்டுக்கட்டாக பணம் சேரும் என்கிற ஐதீகமும் உண்டு.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த நன்றி தெரிவிப்பு

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

மேலும் பதிவுகள்

தனுஷை பாராட்டிய இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,...

அரசாங்க ஊழியர்கள் வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை

சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

ஆப்கான் நிலநடுக்கத்தில் 255 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று (22) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரங்களில் இன்று காலை...

சீரகத்தினால் ஏற்படும் நன்மை

சமையலுக்கு பயன்படும் சின்னசீரகம் உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும். இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து,...

நெற்றியில் விபூதி ஏன் அவசியம் தெரியுமா

வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து...

பிந்திய செய்திகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

துயர் பகிர்வு