நம் வீட்டை சுலபமாக நல்வழிப்படுத்த இந்த வைக்கோல் போதும்.
ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வைக்கோல், ஒரு கைப்பிடி அளவு நெல் மணி, ஒரு விரலி மஞ்சள், சிறிய கரித்துண்டு ஒன்று, ஒரு ரூபாய் நாணயம், இந்த ஐந்து பொருட்களையும் ஒன்றாக வைத்து சிறிய முடிச்சு போல கட்டி உங்களுடைய நிலை வாசலில் கட்டித் தொங்க விடுங்கள்.
இந்த முடிச்சை வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் 6 மணி போல குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு தயார் செய்து நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும்.
தினமும் விளக்கு ஏற்றும் போது ஊதுபத்தியை நிலை வாசலில் இருக்கும் இந்த முடிச்சுக்கு காண்பித்தால் மட்டும் போதும். அவ்வளவு தான்.
இந்த சிறிய முடிச்சுக்குள்ளே இருக்கக்கூடிய வைக்கோல் உங்களுடைய குடும்பத்தை சீர்படுத்தி நேர்வழியில் நல்வழிப்படுத்தும்.
நன்றி தெய்வீகம்