நீங்கள் கணவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவியாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வாழ்க்கை துணையோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைமேல் பலன் தரும் பரிகாரம்.
செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகில் இருக்கக் கூடிய துர்கை அம்மன் கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று 2 சிறிய மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
நீங்கள் பெண்களாக இருந்து உங்களுடைய கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றால் மேல் சொன்ன படி விளக்கு ஏற்றி விட்டு, அந்த அம்பாள் கோவிலில் கொடுக்கக்கூடிய குங்கும பிரசாதத்தை வாங்கி, அந்த அம்பாள் முன்பாகவே நின்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அதாவது ‘என்னுடைய கணவரோடு நான் வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து அந்த குங்குமத்தை முதலில் வகுட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கும்பத்தை உங்களுடைய மாங்கல்யத்தில் இட்டுக் கொள்ளுங்கள்.
அம்பாளைப் பார்த்தவாறு நின்று குங்குமத்தை இப்படி வைத்துக் கொள்ள வேண்டும். 11 வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
பெண்களுக்கு இடையே ஒரு வாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அதாவது மாதவிலக்கு நாள் வரும்போது, அந்த வாரத்தை தவிர்த்துவிடுங்கள். அடுத்த வாரத்திலிருந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
தவறு கிடையாது. இந்த பரிகாரத்தை ஒரு ஆண் செய்ய வேண்டுமென்றால் இதே போல் தான் மேலே சொன்னபடி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அம்பாளிடம் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து, அம்பாள் சந்நிதியில் கொடுக்கும் குங்குமத்தை வாங்கி ஆண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும்.
ஆனால் இந்த குங்குமத்தை உங்கள் கையாலேயே கொண்டுபோய் உங்களுடைய மனைவியின் நெற்றியில், வகுட்டில், மாங்கல்யத்தில், நீங்களே வைத்து விடுவது மிகவும் சிறப்பு.
முடியாதவர்கள் அவர்களிடம் கொடுத்து இட்டுக்கொள்ள சொல்லுங்கள். இதை ஆண்களும் 11 வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு பாருங்கள். உங்களுடைய இல்லற வாழ்க்கை எப்படி இனிமையாக மாறுகிறது என்று.