முதலில் காலையில் எழுந்தவுடன் பெண்கள் வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட வேண்டும். அவ்வாறு கோலமிடும் போது வடக்கு திசையை நோக்கி நின்று கோலமிடக்கூடாது.
சூரியனை வரவேற்கும் வகையில் வடக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நின்று கோலமிடலாம். அதேபோல் தண்ணீர் தெளிக்கும் பொழுது அந்த தண்ணீரில் மஞ்சள்தூள் மற்றும் சாணம் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை தரக்கூடியதாகும்.
பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் இடும்பொழுது கிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு, இரு புருவங்களின் மத்தியில் குங்குமத்தை வைக்க வேண்டும். பிறகு நெற்றியில் வகுடின் முன்பகுதியில் குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.
திருமணம் ஆகாத பெண்கள் வகுடில் குங்குமம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பொதுவாகவே பெண்கள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இப்படி விரதமிருந்து இறைவனை வேண்டிக் கொண்டதன் மூலம் தனது குடும்பத்திற்கும், தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை நடக்கும் என்பது அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் விரதமிருக்கும் கூடாது. அதேபோல் உக்கிரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கும் செல்லக்கூடாது.
திருமணமான பெண்கள் கால்களில் மெட்டி அணியும் பொழுது ஒரு விரலில் மட்டும் தான் அணிய வேண்டும். இரண்டு, மூன்று என ஒவ்வொரு விரலிலும் தொப்பி அணிவது குடும்பத்திற்கும், அவர்களின் கனவருக்கும் நன்மை கொடுக்காது.
இவ்வாறு செய்வதன் மூலம் கணவரின் தொழிலில் லாபம் கிடைக்காது, நஷ்டம் ஏற்படும், உடல் உபாதைகள் உண்டாகும்.
அடுத்ததாக பெருமாள் கோவிலுக்கு சென்று வரும்போது அங்கு கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. அவற்றை பிரசாதமாக உண்ண வேண்டும்.
சாமி கும்பிட வரும் பொழுது கொடிமரத்திற்கு அருகே வந்து இரண்டு கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து வைத்து, மண்டியிட்டு கடவுளை வணங்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது எதிர்மறை ஆற்றல் குறைந்து ஆன்ம அமைதி கிடைக்கும்.