வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.
27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதால், திங்கட்கிழமை இந்த இலைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு விநாயகர் படத்தை முன்பாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
விநாயகருக்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். 27 இலைகள் இருக்கிறதல்லவா. அதில் உங்களுடைய வேண்டுதலை ஒரே வரியில் எழுத வேண்டும்.
எந்த வேண்டுதலாக இருக்கட்டும். அதை சிறிய வரியாக சுழுகி கொள்ளுங்கள். கடன் தீர, நல்ல வேலை கிடைக்க, திருமணம் நடக்க, பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க, பிள்ளை வரம் வேண்டி, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ, இப்படி எந்த தேவையாக இருந்தாலும் சரி அந்த வேண்டுதலை,
இலையில் எழுதி இலையை சுருட்டி ஒரு சிவப்பு நிற நூலில் இதை மாலையாகத் தொடுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்திற்கு போட்டுவிடுங்கள். (சாதாரண பேனாவைக் கொண்டு எழுதினாலே போதும். இலை கிழியாமல் லேசாக எழுதுங்கள்).
முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் அரசமரத்தடி விநாயகர் இருந்தால் அந்த விநாயகருக்கு இந்த மாலையை கொண்டு போய் தாராளமாக போடலாம். இன்னும் சிறப்பு.
உங்களுடைய வீட்டில் விநாயகர் சிலை இருந்தால் அந்த சிலைக்கு சிறியதாக பால் அபிஷேகம் செய்துவிட்டு அந்த சிலைக்கு இந்த மாலையை போடலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதை இலை வாடிய பின்பு, அதாவது அடுத்த நாள் புதன்கிழமை இந்த மாலையை எடுத்து கால் படாத இடத்தில், செடி கொடிகளுக்கு மேலும் போட்டுவிடலாம்.
இதேபோல 9 வாரங்கள் ஒரே வேண்டுதலை அந்த இலையில் எழுத வேண்டும். ஒன்பது வாரம், இருபத்தி ஏழு இலைகளை, மேல் சொன்ன முறைப்படி விநாயகருக்கு போட்டு உங்களுடைய வேண்டுதலை வைத்து பாருங்கள்.
ஒன்பதாவது வாரம் என்ன நடக்கிறது என்பதையும் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்கள் நிச்சயம் வெற்றி காண்பீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
நன்றி தெய்வீகம்