மிளகு தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபடக் கூடிய அற்புதமான ஒரு தீபம் ஆகும்.
இதை வீட்டில் வைத்து தாராளமாக ஏற்றி வழிபடலாம். கடன் ஒழிய பைரவரை நினைத்து வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.
அதிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்கிற நம்பிக்கையும் உண்டு.
தோஷங்கள் நீங்கி, கடன் ஒழிய ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பி 2 அகல் தீபங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் எண்ணெய் விட்டு ஒரு வெள்ளை துணி அல்லது மஞ்சள் துணியில் சிறு மூட்டையாக கொஞ்சம் மிளகுகளை போட்டு கட்டி எண்ணெயில் மூழ்க வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் எரிந்து முடியும் வரை பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். இவ்வாறு செய்ய எத்தகைய கடனும் காணாமல் போகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
துர்க்கை அம்மனுக்கு ஏற்றப்படும் எலுமிச்சை தீபத்தை எக்காரணம் கொண்டும் வீட்டில் ஏற்றக்கூடாது.
உக்கிர தெய்வங்களுக்கு ஏற்றப்படும் பரிகார தீபங்கள் கண்டிப்பாக வீட்டில் ஏற்றவே கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி தெய்வீகம்