ஆண், பெண் இருவருமே தினமும் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் குங்குமத்தை இட்டுக் கொள்ளும் பொழுது உங்களுடைய கட்டை விரலை கொண்டு இட்டுக் கொண்டால் மனோதிடம் அதிகரிக்கும். தைரியம், துணிச்சல் போன்றவை இயற்கையாகவே உங்களுக்கு கிடைக்கும் அற்புத ஆற்றல்கள் ஆகும்.
எனவே கட்டை விரலால் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டு நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் உங்களுக்கு வெற்றி தான்.
ஒருவர் மற்றவர்களை கட்டி ஆள வேண்டும் என்றால் உங்களுடைய ஆள்காட்டி விரலால் தினமும் நெற்றியில் குங்கும பொட்டு இட்டுக் கொள்ளுங்கள்.
ஆளுமைத் திறன், தலைமை பண்பு, நிர்வாகத் திறமை மற்றும் அடுத்தவர்களை எதிர்கொள்ளும் வலிமை, சூழ்ச்சிகளை முறியடிப்பது போன்றவற்றை நமக்கு கொடுக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.
தினமும் நெற்றியில் நடு விரல் கொண்டு குங்குமத்தை எடுத்து வைத்துக் கொண்டால் தீர்க்காயுள் ஏற்படும்.
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்களுக்கு இது போல தினமும் நெற்றியில் நடுவிரலால் குங்குமத்தை வைக்க சொல்லுங்கள். இது உங்களுக்கு நல்ல ஒரு ஆரோக்கியத்தையும், ஆயுளையும் நீடிக்கச் செய்யும்.
மோதிர விரலால் குங்குமத்தை இட்டுக் கொண்டால் நமக்கு நேர்மையாக இருக்க கூடிய குணமும், துணிச்சலும் அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக எதிர்கொள்வதற்கு முதலில் நேர்மை தேவை.
இந்த நேர்மையை வளர்க்கக்கூடிய பண்பை அதிகரிக்க செய்யும் மோதிர விரல் கொண்டு குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள், வெற்றி உங்கள் பக்கம் திரும்பும்.
பெண்கள் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ளும் பொழுது ‘ஸ்ரீயை நமஹ’ அல்லது ‘மகாலட்சுமியே போற்றி’ என்கிற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மேலும் எவரொருவர் குங்குமத்தை தினமும் நெற்றியில் புருவ மத்தியில் இட்டுக் கொள்கின்றனரோ, அவர்களுக்கு நீண்ட ஆயுளோடு, இளமையும் கூட துவங்கும்.
நெற்றிப் பொட்டுக்கு மத்தியில் இருக்கும் இந்த ஆக்ஞா சக்கரம் அழுத்தம் கொடுப்பதால் இளமையோடு இருக்கவும் உதவுகிறது குங்குமம்.
எனவே குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு பல்வேறு நலன்களையும், பலன்களையும் பெறுங்கள்.
நன்றி தெய்வீகம்
