பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும்.
அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு அதில் மூன்று கண் உள்ள பகுதியை சுவாமியின் வலது புறமும், தேங்காயின் இன்னொரு பகுதியை சுவாமியின் இலது புறமும் வைத்து விட வேண்டும்.
கோவிலில் அர்ச்சனை செய்து உடைக்கப்படும் தேங்காயின் ஒரு பகுதியை பூசாரியிடம் கொடுக்கும் பொழுது, மூன்று கண் இருக்கும் பகுதியை கொடுத்துவிடக் கூடாது.
மூன்று கண் உள்ள தேங்காய் பகுதியை வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது தான் பூஜை செய்த முழுபலனும் கிடைக்கிறது.
எனவே மற்ற பாதியை பூசாரியிடம் கொடுத்து விட வேண்டும்.
நன்றி தெய்வீகம்