இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.
இப்படி சாமி கும்பிட செல்லும் போது உங்களுடைய உள்ளங்கைகளில் 3 மிளகை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.வேண்டுதலை இறைவனிடம் வைத்துவிடுங்கள்.
கையில் மிளகு அப்படியே இருக்கட்டும். வீட்டிற்கு வெளியே செல்வதற்காக நிலை வாசல்படியை தாண்டி விடுங்கள்.
நிலைவாசல் வெளி பக்கத்தில் இந்த மூன்று மிளகை தரையில் வைத்து காலால் தாண்டி செல்ல வேண்டும்.
உங்களுடைய வலது காலை தூக்கி மிளகுக்கு அந்தப்பக்கம் வைத்து நீங்கள் கடந்து செல்ல வேண்டும் அவ்வளவுதான்.
நிலை வாசலில் இருக்கும் மிளகை உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியோ அம்மாவோ கை படாமல் எடுத்து தூர தூக்கி போட்டுவிடலாம்.
எக்காரணத்தைக் கொண்டும் தாண்டிய மிளகை உங்களுடைய கையில் தொட்டு எடுக்க வேண்டாம்.
ஒரு பேப்பரில் ஒரு துணியை எடுத்து தூக்கி தூரப் போட்டு விடுங்கள்.
ஒருவேளை வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் வெளியே கிளம்புவதாக இருந்தால், மிளகு நிலை வாசலில் அப்படியே இருக்கட்டும்.
நீங்கள் வீட்டிற்கு திரும்பும் போது யாராவது ஒருத்தர் அந்த மிளகை பேப்பரில் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அதன் பின்பு வீட்டிற்கு வரலாம்.
