வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள்.
பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு வெற்றிலையை வைத்து, அந்த வெற்றிலையின் மேலே ஒரு வெள்ளி பொருளை வைக்க வேண்டும்.
வெள்ளி நாணயம், வெள்ளி மோதிரம், கம்மல், வெள்ளி டாலர், இப்படி எதுவாக இருந்தாலும் சரி மஞ்சள் தண்ணீரில் அந்த வெள்ளியை கழுவிவிட்டு இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெற்றிலைக்கு மேலே வைத்த வெள்ளி பொருளுக்கு மஞ்சள் பொட்டு வைக்க வேண்டும்.
மஞ்சளில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி குழைத்து வாசனையாக தயார் செய்து கொள்ளுங்கள்.
அந்த மஞ்சளை சிறிய உருண்டையாக பிடித்து எடுத்து வெள்ளி பொருளுக்கு மேலே வைத்து விடுங்கள்.
இதை அப்படியே பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை வேண்டிக்கொள்ள வேண்டும்.
இந்த ஒரு சிறிய வெள்ளி பொருளை மஞ்சள் வைத்து பூஜித்து மகாலட்சுமி தாயாரிடம் வேண்டிக் கொண்டால், உங்கள் வீட்டில் தங்கம் தானாக வந்து சேரும்.
பூஜையை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து வெற்றிலையோடு அந்த வெள்ளி நகையை உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, வெள்ளி நகையை தேவைப்பட்டால் நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
இல்லை என்றால் அதை அப்படியே பீரோவில் வைத்துக் கொள்ளலாம்.
