ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது.
உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும்.
இதனால் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் சிறிது நேரமாவது அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நலம் தரும்.
ரொம்பவே எளிமையாக இருக்கக்கூடிய இந்த ஓம் என்பது, பிரணவ மந்திரத்தை குறிக்கிறது.
இம்மந்திரம் முருகப் பெருமானுக்கு உகந்ததாக இருக்கிறது. கண்டிப்பாக முருகன் படம் வைத்திருப்பவர்கள், ஒரு சிறு படமாவது ஓம் எனும் மந்திரம் இருக்குமாறு மாட்டி இருப்பீர்கள்.
நீண்ட நாளாக நோய் வாய் பட்டவர்கள், நோயால் அவதிப்படுபவர்கள் இது போல பூஜை அறையில் அமைதியாக தியான நிலையில் அமர்ந்து 108 முறை ஓம் என்னும் மந்திரத்தை நிறுத்தி நிதானமாக மெதுவாக கூறி மெதுவாக மூச்சை இழுத்து விடவும்.
இழுத்து மூச்சை விடும் பொழுது பிரணவ சக்தி இயற்கையாக நமக்கு கிடைக்கிறது.
நன்றி தெய்வீகம்
