வசம்பு விளக்கு பரிகாரம்

கடன், நோய், பகை, துன்பம் போன்றவை பொதுவாக எல்லோருக்குமே இருக்கின்ற பிரச்சனைகள் தான்.

இத்தகைய வாழ்வை துயரமாக்கிக் கொண்டிருக்கும் தீராத பிரச்சனைகளை இந்த ஒரு பரிகார விளக்கு ஏற்றுவதால் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறது ஆன்மீகம்

இந்த விளக்கை எந்த நேரத்திலும் நீங்கள் ஏற்றலாம். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏற்றி வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்து ஏற்ற வேண்டிய விளக்காக கருதப்படுகிறது.

தென்மேற்கு திசையில் பூஜை அறை அமைக்கப்படுவது இல்லை, எனவே உங்கள் வீட்டில் எந்த இடம் தென்மேற்கு திசை? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த இடத்தில் ஒரு சிறிய அளவிலான தாம்பூல தட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் மீது ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். அகல் விளக்கில் வேப்ப எண்ணெயை சிறிதளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.

அதனுள் ஆறு நெல்லிக்காய் கொட்டைகளை போட வேண்டும்.

சிறிய அல்லது பெரிய நெல்லிக்காயின் கொட்டைகளை எடுத்து உலர வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

அதை இந்த வேப்ப எண்ணெயில் போட்டு சிறிதளவு பெயர் சொல்லாத அந்த மூலிகை பொடியை சேர்க்க வேண்டும்.

பெயர் சொல்லாத அந்த மூலிகை ‘வசம்பு’ ஆகும். இதை கடையில் கேட்டு வாங்கும் பொழுது பெயர் சொல்லாமல் இருந்தால் போதும்.

இப்படி கேட்டாலே நாட்டு மருந்து கடைகளில் கொடுப்பார்கள். வசம்பை வாங்கி வந்து சிறிதளவு பொடித்து அதை இந்த தீபத்தினுள் போட வேண்டும்.

பின்னர் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றுங்கள். ஏற்றிய தீபத்தினுள் ஒரு துண்டு வசம்பு குச்சியை போட்டு வையுங்கள்.

குறைந்தது 3 மணி நேரம் இந்த தீபம் நின்று எரிய வேண்டும். நீங்கள் அமைதியாக அமர்ந்து உங்கள் குலதெய்வத்தை நினைத்து உங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்க வேண்டும்.

இந்த தீபத்தை எரிய விட்டுவிட்டு நீங்கள் உங்களுடைய பிரச்சனைகளை மனதில் சொல்லி குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆசிரியர்