16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.

அதில் முக்கியமான இந்த ஒரு பொருளை ஆடிப்பெருக்கென்று நீங்கள் வாங்கி வைத்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும்.

கல் உப்பு வாங்குவது ரொம்பவே சிறப்பானது. கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் எனவே ஆடிப்பெருக்கு அன்று புதிதாக கல் உப்பு பாக்கெட் ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடியில் முழுவதுமாக தழும்ப நிரப்பி வைக்க வேண்டும்.

அது போல இந்த ஒரு முக்கியமான பொருளையும் ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டும். குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும்.

ஆசிரியர்