பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள்.
அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம் பருப்பு டப்பாவில் வைத்திருந்தால் பணமானது மென்மேலும் பெருகும்.
அது போல இருக்கின்ற பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பணத்தில் இருக்கும் தோஷங்கள், ஏவல்கள் நீங்கவும், பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும் மிளகாய் டப்பாவில் பணத்தை போட்டு வைக்கலாம்.
ஏதாவது ஒரு மெல்லிய காட்டன் துணியில் மடித்து மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள்.
மீண்டும் உங்களுடைய தேவைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மிளக்காய் நெடி பணத்தில் இருக்கும் தோஷங்களை நீக்கும் என்பது தாந்த்ரீக பரிகாரமாகும்.
இது போல ஒவ்வொரு முறை பணம் உங்களிடம் வரும் பொழுது அந்த டப்பாவில் வைத்து எடுப்பதால் உங்களுக்கு மென்மேலும் பணமானது பெருக துவங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
