வெள்ளருக்கன் பூ தரும் அதிஷ்டம்

வெள்ளருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

முடிந்தவர்கள் வீட்டில் வெள்ளருக்கு விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். வெள்ளருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு சாத்தி வழிபாடு செய்வோம்.

விநாயகருக்கு சாத்தக்கூடிய இந்த வெள்ளருக்கன் பூவிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய சக்தி நிறைவாக இருக்கின்றது. இந்த வெள்ளருக்கன் பூ இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல் அண்டாது.

கெட்ட சக்திகள் நெருங்காது. வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்தி கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி அடிக்கக்கூடிய தன்மையும் இந்த வெள்ளெருக்கம் பூவுக்கு உள்ளது.

வெள்ளருக்கன் செடியிலிருந்து வெள்ளருக்கன் பூவை நீங்களே பறித்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு யாரிடமாவது சொல்லி வைத்து இந்த வெள்ளருக்கன் பூவை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாலும் சரிதான்.

அதை வீட்டிற்கு கொண்டுவந்து முதலில் தண்ணீரில் கழுவி விடுங்கள். அதன் பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, அந்த தண்ணீரில் இந்த வெள்ளருக்கன் பூவை போட்டு உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் இதை பத்திரமாக வைத்து விடுங்கள்.

அடுத்தவர்கள் கைப்பட்டு தண்ணீர் கீழே கொட்டும்படி வைக்க வேண்டாம். வெள்ளருக்கன் பூ, தண்ணீரில் இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.

பூ வாடிய பின்பு டம்ளரில் உள்ள பழைய தண்ணீரையும் பூவையும் மாற்றிவிட்டு மீண்டும் வெள்ளருக்கன் பூவை புதிய தண்ணீரில் போட்டு வரவேற்பரையில் வைக்கலாம்.

வெள்ளெருக்கு பூ உங்களுக்கு கிடைக்கும் போதெல்லாம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய துரதிஷ்டம் உங்களை விட்டு தூர சென்று விடும்.

ஆசிரியர்