ஆடி மாதத்தில் புது வீடு பால் காய்ச்சலாமா

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால் தாராளமாக வீடுகுடி போகலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதற்கு கடக மாதம் என்று பெயர்.

அதாவது, தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் இணையும் மாதம் இது.

சூரியனின் பிரத்யதிதேவதை, பசுபதி எனப்படும் ஈஸ்வரன்.

சந்திரனின் பிரத்யதிதேவதை, கௌரி எனப்படும் அம்பிகை.

இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம்.

ஆன்மிக ரீதியாக நோக்கினால் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் பெண் என்கிற சக்தி ஆடி மாதத்தில் மிகவும் மகத்துவம் பெறுகிறாள்.

ஆடி, புரட்டாசி, மார்கழி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகும்.

கோவில்களில் விழாக்கள் களைகட்டும்.

அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம்.

புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதம், நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும்.

மார்கழி மாதம் தனுர் மாதம் வழிபாட்டிற்கு உரிய மாதமாகக் கூறப்பட்டுள்ளது.

” ஆடித்திங்கள் ராவணன் பட்டதும். ஆலமேய்பேறும்பாரத மார்கழி. வீடிட்டான் புரட்டாசி இரணியன். மேவிய ஈசன் நஞ்சு உண்டது மாசியில். படிக்காமெரிந்தது பங்குனி . பாருக்குள்ளேகினன்மாபலி .ஆனியில்வீடிட்டில்லங்ட்டில்லங்குடிவேண்டினேர்ஓடிட்டேஇரந்து ண்பருலகிலே” என்கிறது பழம்பாடல்

ஆனி மாதத்தில் மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் நிகழ்ந்தது.

ஆடி மாதத்தில் இராவண சம்ஹாரம் நடந்தது.

மார்கழி மாதத்தில் பாரத போர் நடந்தது.

புரட்டாசி மாதத்தில் இரணிய சம்ஹாரம் நடந்தது.

மாசி மாதத்தில் பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது.

மன்மதனை சிவ பெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் நிகழ்ந்தது பங்குனி மாதம் என்பதால் இந்த மாதங்களில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர்

இன்றைய கால கட்டத்தில் ஆடி மாதத்தில் சில வீடு பால்காய்ச்சுகின்றனர்.

திடீரென வேலையில் இடமாற்றம் கிடைத்தவர்கள் வேறு வழியில்லை என்றால் வீடு பார்த்து பால் காய்ச்சுகின்றனர்.

காரணம் இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வதால் வீடு பால் காய்ச்சுவதில் தவறில்லை என்கின்றனர்.

அதே போல நிலம் வாங்க அட்வான்ஸ் தரலாம்.

புது வீடு பார்த்து வாங்குவதற்கு அட்வான்ஸ் தரலாம் என்றும் கூறுகின்றனர்.

ஆடி மாதத்தில் வாஸ்து நாளில் புது வீடு பால் காய்ச்சலாம்.

அதே போல ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம்.

அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது.

அமிர்த யோகம் காலத்தில் கிரகப்பிரவேசம் செய்து நல்லது.

வீட்டின் உரிமையாளர் குடி போக விரும்பும் மாதத்தில் பிறந்தவர் என்றால், அந்த மாதத்தில் குடி போகக்கூடாது.
சந்திராஷ்டமம், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது.

ஞாயிற்றுக் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

திங்கட்கிழமைகளில் வீடு கிரகப்பிரவேசம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிட்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் குடும்ப ஒற்றுமை குறையும்.

புதன் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வர்.

வியாழக்கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் பெருமையும் நல்ல வாழ்வும் உண்டு.

வெள்ளிக் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் மனைவிக்கு ஆகாது.

சனிக்கிழமைகள் கிரகப்பிரவேசம் செய்தால் சுகமான வாழ்வு உண்டு.

புது வீடு கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம்.

லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம்.

காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி.

பால் காய்ச்சுவதற்கு புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும்.

பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

பசுவை கன்றுடன் வீட்டிற்குள் அழைத்து கோ பூஜை செய்ய வேண்டும்.

வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.

காய்ச்சிய பாலை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் வீட்டின் உரிமையாளர் மனைவி, குழந்தைகளுடன் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் என உறவினர்களுக்கு காய்ச்சிய பாலை தட்டில் வைத்து கொடுக்கலாம்.

நன்றி | நியூ லங்கா

ஆசிரியர்