குபேர வாசம் செய்யக்கூடிய ஒரு இடம் வடகிழக்கு

நம்முடைய வீட்டில் எப்பொழுதும் சரியான திசையில் வைக்க வேண்டிய பொருட்களாக சில உள்ளன.

அதில் கடிகாரம், தலை வைத்து தூங்கும் கட்டில் தலை பாகம், முகம் பார்க்கும் கண்ணாடி, வீடு கூட்டும் துடைப்பம், காலணிகள், குப்பை தொட்டி, பழங்காலங்களில் இருந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் போன்றவை, துணிமணிகளையும், பணத்தையும் வைக்கும் பீரோ போன்றவையும் அடங்கும்.

நம் வீட்டில் குபேர வாசம் செய்யக்கூடிய ஒரு இடம் வடகிழக்கு! இந்த வடகிழக்கு பகுதியில் கனமான பொருட்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். கனமான பொருட்கள் அந்த இடத்தில் இருந்தால் நமக்கு செல்வ வளமானது குறைய துவங்கும்.

குபேர வாசம் அங்கு மறையும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. அதே போல குபேரன் வாசம் செய்யும் இந்த வடகிழக்கு மூலையில் அதிக கனம் உள்ள பொருட்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

மேலும் அங்கு ஷூ ரேக்குகள், காலணிகள், கழிப்பறை போன்றவை இருந்தால் கண்டிப்பாக அதை இடம் மாற்றி வைத்து விட வேண்டும். இல்லை என்றால் பணம் வருவதில் தடை ஏற்படும். எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கக் கூடிய இந்த பொருட்கள் கண்டிப்பாக வடகிழக்கு மூலையில் இருக்கக் கூடாது எனவே அதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக வடகிழக்கு மூலையில் குறுகிய இடமாக இருக்கக் கூடாது. நல்ல விசாலமான, அகலமான மற்றும் எந்த பொருட்களும் இல்லாமல் காற்றோட்டமான இடமாக அமைந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் குப்பைகள் இருக்கக் கூடாது.

எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழைய பொருட்கள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் எதுவும் அங்கு வைக்க கூடாது. இது குடும்பத்திற்கு ஆகாது. பணவரவை தடை செய்யும்.

வருமானத்தை குறைக்கும் எனவே இதை சரி பாருங்கள். வீட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் வடக்கு திசையில் அமைந்துள்ள சுவரில் கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதனால் செல்வ வளமானது பெருக துவங்கும்.

வருமானம் உயரும். புதிய தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஒரு லாபம் தரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும். மேலும் அந்த இடத்தில் கண்ணாடிக்கு பதிலாக குபேர எந்திரத்தையும் பதிக்கலாம்.

குபேர எந்திரம் பதிப்பது ரொம்பவும் மேலான அற்புதமான பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. எந்த உலோகத்தால் இருந்தாலும் பரவாயில்லை, குபேர எந்திரம் ஒன்றை வாங்கி வடக்கில் சுவற்றில் பதித்து வையுங்கள்.

அதற்கு தினமும் சந்தன குங்குமம் இட்டு தூபம் காண்பியுங்கள். இதனால் குடும்பத்தில் வறுமையை நீங்கி குபேரனை போல நீங்களும் செல்வ வளங்களோடு இருக்கலாம்.

ஆசிரியர்