தீராத கடனும் தீரும் பரிகாரம்

லக்ஷ்மி நரசிம்மர் பண பிரச்சனையை தீர்க்கக் கூடிய அற்புதமான கடவுள் ஆவார்! இவரை வேண்டி வணங்குபவர்களுக்கு பண ரீதியான எந்த பிரச்சனைகளும் வருவதில்லையாம்.

அந்த அளவிற்கு பணம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட செய்யக்கூடிய அற்புதமான கடவுளாக விளங்கக்கூடிய இவரின் அருளை ரொம்பவும் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சன்னிலியில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஆறு விளக்குகளும் நெய் விளக்குகளாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இது போல 5 வாரம் தொடர்ந்து நீங்கள் லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் ஆறு விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்து வந்து பின் தீபம் ஏற்றிய பிறகு ஆலமரத்திற்கு செல்ல வேண்டும்.

ஆலமரத்தை சுற்றி 54 முறை அல்லது 108 முறை வலம் வந்து வழிபட வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். நரசிம்மர் கோவிலில் விளக்கேற்றிவிட்டு, ஆலமரத்தை 108 முறை சுற்றி வர உங்களுக்கு தீராத கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதாக நம்பிக்கை கூறப்படுகிறது.

ஆசிரியர்