பண பொருள் பிரச்சனையா மனம் தளர வேண்டாம் இதை செய்யுங்கள்

ஒரு வெற்றிலை. ஒரு படிகார கல். ஒரு கிழிசல் இல்லாத கொஞ்சம் பெரிய வெற்றிலையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

படிகார கல்லை எடுத்து அந்த வெற்றிலையின் மேல் எழுத வேண்டும். (பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.) படிகார கல்லைக் கொண்டு வெற்றிலையில் எழுதினால் நம் கண்ணுக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் பரவாயில்லை.

படிகார கல்லை கொண்டு வெற்றிலையின் மேல் கடன் தீர வேண்டும் என்று எழுதுங்கள். உங்களுக்கு சுமையை கொடுக்கும் கடன் எது. அந்த நபரின் பெயரை எழுதி, அந்த கடன் தீர வேண்டும் என்று அந்த வெற்றிலையில் எழுதலாம்.

நீங்கள் எழுதும் எழுத்து இந்த பிரபஞ்சத்திற்கு தெரியும். உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது. (எழுதிய இடத்திலேயே மீண்டும் எழுதினால் கூட தவறு கிடையாது.)

உதாரணத்திற்கு வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

வீட்டுக் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதலாம். இப்படி எழுதி விட்டு அந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி ஒரு மஞ்சள் நூல் போட்டு கட்டி அரச மரத்துக்கு அடியில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து விடுங்கள்.

எல்லோர் வீட்டு அருகிலும் அரசமரம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த இலையை கொண்டு போய் ஏதாவது ஒரு கோவிலில் இருக்கும் தல விருச்சங்களுக்கு கீழே வைத்து விட்டு வரலாம். அப்படி இல்லை என்றால் இந்த வெற்றிலையை ஒரு நூல் போட்டு கட்டி, ஏதாவது ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டு வரலாம்.

இது ஒரு தாந்திரீக பரிகாரம். வெற்றிலையும் படிகாரமும் சேரும்போது உங்களுடைய இந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

எல்லா விஷயத்திலும் வெற்றியை கொடுப்பது வெற்றிலை. வெற்றியை தடுப்பதற்கு உண்டான தடைகளை தகர்க்கும் சக்தி படிகாரத்திற்கு உள்ளது.

ஆகவே இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயமாக உங்கள் கடன் தொல்லை தீர ஏதாவது ஒரு ரூபத்தில் வழி கிடைக்கும்

ஆசிரியர்