இறுதி ஓவரில் 4 ஆறு ஓட்டங்களுடன் சென்னை அணிக்கு இமாலய இலக்கு

இறுதி ஓவரில் 4 ஆறு ஓட்டங்களுடன் சென்னை அணிக்கு இமாலய இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலன்சர்ஸ் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் சென்னை அணிக்கு 217 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக சஞ்சு சம்சன் 74 ஓட்டங்களையும் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 69 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, இறுதி ஒவரில் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தமை விசேடம்சமாகும்.

அவர் 8 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து 27 ஒட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் சென்னை அணி சற்று முன்னர் வரை ஒரு ஓவர் நிறைவுக்கு 4 ஒட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆசிரியர்