சீனாவின் ஊடுருவலை தடுக்க செய்மதிகளை கோரும் இந்தியா

சீனாவின் படைகளை கண்காணி க்கும் வகையில் இந்தியாவின் இராணுவம் மொத்தம் 6 தனி செய்மதிகளை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.இந்தியா_ சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. அங்கு இன்னும் சீனாவின் படைகள் உள்ளன. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லையென இந்தியா குற்றம் சுமத்துகிறது.

அந்த இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் முழு கவனத்துடன் இந்திய இராணுவம் செயற்பட்டு வருகிறது.இந்த நிலையில் சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்திய இராணுவம் மொத்தம் 6 தனி செய்மதிகளை மத்திய அரசிடம் அவசரமாக கேட்டுள்ளது. சீனாவின் படைகள் எங்கே செல்கின்றன, எங்கே குவிக்கப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு இந்த ெசய்மதிகளை இராணுவம் கேட்கவுள்ளது.

கடந்த மே மாதம் இறுதியில் லடாக் எல்லையில் திடீரென்று 40000 வீரர்களை சீனா களமிறக்கிறது. இந்தியா எதிர்பார்க்காத நேர்தத்தில் 4000 கி.மீ எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா தனது படைகளை களமிறங்கியது.

இதை இந்தியாவால் சரியாக கணிக்க முடியவில்லை. போதுமான செய்மதி தகவல்கள் இல்லாத காரணத்தால் கடைசி நேரத்தில்தான் சீனாவின் படைக் குவிப்பை கண்டுபிடிக்க முடிந்தது. இராணுவத்திற்கு என்று தனியாக நிறைய செய்மதிகள் இருந்தால் இப்படி நடந்திருக்காது. முறையான செய்மதி இருந்தால் சீனாவின் படை குவிப்பை முன்பே இந்திய இராணுவம் கணித்து இருக்கும்.

இந்த நிலையில் இதற்காகவே தற்போது இந்திய பாதுகாப்புப் படை 6 செய்மதிகள் கேட்கிறது. வீரர்களை கண்காணிக்கும் வகையில் துல்லியமான கமராக்கள் கொண்ட, இராணுவத்திற்கு மட்டும் என்று பயன்படும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட செய்மதிகளை கேட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த ‘சென்சர்கள்’ இதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்புத்துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் ஏற்கனவே இராணுவ பயன்பாட்டிற்கான செய்மதிகள் உள்ளன. ஆனால் இந்த செய்மதிகளால் சீனாவின் ஆக்கிரமிப்பை முழுவதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பாதுகாப்பு துறை புதிய செய்மதிகளை கேட்டு இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதுஇவ்விதமிருக்க, இரு நாட்டு எல்லையில் உள்ள பாங்​ெகாங் திசோ பகுதியில் இருந்து மேலும் படைகளை வாபஸ் வாங்க முடியாது, தற்போது அங்கிருக்கும் ரோந்து பகுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என்று இந்தியா அதிரடியாக தெரிவித்துள்ளது. பாங்​ெகாங் திசோ பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு சீனா படைகளை குவித்து உள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் கட்டுப்பாட்டு பகுதி 4இல் கூட சீனாவின் வாகனங்கள் இருக்கின்றன.

‘இந்தியா அங்கிருந்து பின்வாங்குவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். பாங்காங் திசோவில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து இந்தியா பின்வாங்கினால் மொத்தமாக பிரச்சினை சரியாகி விடும் என்று சீனா கூறியிருந்தது.

ஆனால் எல்லையில் முழுமையாக அமைதி திரும்பும் வரை எந்த இடத்தில் இருந்தும் ஒரு அங்குலம் கூட படைகளை வாபஸ் வாங்க முடியாது என்று இந்தியா வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை கூறியுள்ளது. சீனா மொத்தமாக அங்கிருந்து படைகளை வாபஸ் வாங்கும் வரை, இந்தியா தனது படைகளை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் இல்லை என்று இந்தியா அதிரடியாக கூறி விட்டது.

நன்றி – தினகரன்

ஆசிரியர்