Wednesday, March 3, 2021
- Advertisement -

TAG

தமிழ்நாடு

’வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து; நிச்சயம் மீட்பேன்!’ – ஜெ.தீபா

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆக்கியதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வாரிசான ஜெ.தீபா தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு...

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – எடப்பாடி

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ...

விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கிருஷ்ணகிரி சென்ற முதலமைச்சர்,...

வாராணசி கவிதைகள் | சுகுமாரன்

காலம்        இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான  காலம்   இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன   இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது   இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின் மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.   இங்கே ஒசிந்து பெய்யும் மழையில் முதலாவது மேகத்தின் உலராத ஈரம் தேங்கியிருக்கிறது.   இங்கே பிரபஞ்சத்தின் சுவாசத்தால் சிலிர்த்தோடும் நதியில் ஆதி நாடோடியின் உமிழ்நீர் ஊறிச் சுவைக்கிறது.   இங்கே மரங்களிருந்து கேட்கும் பறவைக் குரல்களில் மொழிக்கு முந்திய மௌனத்தின் வார்த்தைகள் எழுத்துக் கூட்டி உச்சரிக்கப்படுகின்றன   இங்கே குறுகிய சந்துகளில் பதியும் புதிய காலடிகளின்கீழ் ஆயிரமாயிரம் அறியாச் சுவடுகள் புதைந்திருக்கின்றன   இங்கே முதலாவது கங்குதான் கனன்று கனன்று உயிரின் சுடராக அலைந்து அலைந்து இன்னும் எரிகிறது   இங்கே வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது சாவின் கொள்ளிகளுக்கு இடையில் வாழ்க்கை புன்னகைக்கிறது.   இங்கே மனிதர்கள் வந்துபோவது இன்றை விருந்தோம்பவோ நாளையை வரவேற்கவோ அல்ல இறந்த காலத்தில் புகலடைய   ஏனெனில் வாராணசியில் காலம் ஒன்றே ஒன்று காலங்களைக் கடந்த காலம்.     உஸ்தாத்    கதவுஎண்சி.கே. 46 / 62,    ஹராகாசராய், வாராணசி.    மேற்குறிப்பிட்ட முகவரி இல்லத்தில் பிஸ்மில்லா கான் இல்லை ஆனால் அந்த வீட்டில்தான் அவரைப் பார்த்தேன்   குறுகிய வரவேற்பு அறை மூலையில் அவருடைய காலணிகள் இல்லை ஆனால் தாளகதியுடன் நகரும் இரண்டு பாதங்களை அந்த மூலை அருகில்தான் பார்த்தேன்   கூடத்தின் தரையில் செவ்வண்ண ஜமக்காளத்தின் மீது அவர் உட்கார்ந்திருக்கவில்லை ஆனால் சுருதி பிடித்து மகா குரு ஸ்வரம் கற்பிப்பதை ஜமக்காளத்தின் மறுமுனையில் அமர்ந்துதான் பார்த்தேன்   ளுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தும் அறைக்குள்  அசைவில்லை ஆனால் இருகை உயர்த்தி இறைஞ்சும் குல்லா அணிந்த நிழல் அந்த மேற்குச் சுவர்மேல் அசைவதைப் பார்த்தேன்.   காட்சிப் பேழைக்குள் வரிசையாக மௌனித்திருந்த குறுங்குழல்கள் அப்போது உயிர்பெற்று விம்முவதைக் கேட்டேன்   விழிபனிக்க நிலத்தில் மண்டியிட்டு வணங்கி நிமிர்ந்தேன் ஒரு முதிய ஆள்காட்டி விரல் கண்துளிர்ப்பைத் துடைப்பதைக் கண்ணி்மைக்காமல் பார்த்தேன்   அந்த விரலை முகர்ந்தபோது பனாரசி பானின் வாசனையும் கங்கையின் குளிர்ச்சியும் மண்ணின் சொரசொரப்பும் இருந்தன. வானத்தின் தழுதழுப்பும் இருந்தது.   முக்தி   காசிக்கு வந்தால் அதி விருப்பமானதை இங்கேயே கைவிட்டுப் போவது மரபு.   மரபுக்கு அஞ்சி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகிறார்கள்   சிலர் அம்மாக்களை சிலர் பிள்ளைகளை சிலர் மனைவிகளை சிலர் கணவர்களை சிலர் காதலிகளை சிலர் அநாதைகளை சிலர் ரட்சகர்களை   இவ்வாறு  கைவிடப்பட்டவர்களால் நகரம் நெரிபடுகிறது.   சிலர் ஆடுகளை சிலர் மாடுகளை சிலர் குதிரைகளை சிலர் மயில்களை சிலர் பன்றிகளை சிலர் குரங்களை சிலர் காகங்களை   இவ்வாறு கைவிடப்பட்டவையால் தெருக்கள் முட்டிக்கொள்கின்றன.   சிலர் ஆடைகளை சிலர் ஆசைகளை சிலர் மலர்களை சிலர் நம்பிக்கைகளை சிலர் பிணங்களை சிலர் சாம்பற்குடங்களை சிலர் ஆவிகளை   இவ்வாறு கைவிடப்பட்டவற்றால் படித்துறைகள் திணறுகின்றன   சிலர் ருசியை சிலர் காட்சியை சிலர் கேள்வியை சிலர் மணத்தை சிலர் தொடுகையை சிலர் உணர்வை சிலர் அறிவை   இவ்வாறு கைவிடப்பட்டவையால் கங்கை விம்முகிறது   சிலர் கனவை சிலர் நம்பிக்கையை சிலர் காமத்தை சிலர் மோகத்தை சிலர் ஞாபகத்தை சிலர் தேகத்தை சிலர் ஆன்மாவை   இவ்வாறு கைவிடப்பட்டவற்றால் விசுவநாதன் தடுமாறுகிறான்.   ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகும்போது கையோடு காசியையும் கொண்டு போகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமுறையும் காசியை நினைக்கும்போதும் கைவிட்டவையும் கூடவே வராதா? காசியையும் கைவிடுவதுதானே கதி மோட்சம்?   சுடர்கள் பல்லாயிரம்கோடிக் கைகள் கற்பகோடிக் காலம் தொட்டுத் தழுவி உயிரூட்டிய நம்பிக்கைக் கல்லை நலம்விசாரித்து ஆலய வாசலில் வந்து அமர்ந்தேன்.   ஒட்டி அமர இடங்கேட்டு முன்னால் நின்றவனுக்குப் பனித்த சடை, பவளமேனியில் பால்நிறச் சாம்பல், குனித்த புருவம், கோணற்சிரிப்பு, இடது பொற்பாதத்தில் பித்த வெடிப்பு.   உடல்நகர்த்தி உட்கார இடம் கொடுத்தேன் கைவச உணவில் கொஞ்சம் கொடுத்தேன் யுகப்பசியுடன் விழுங்கிய பின்பு ‘மந்திர் மேம் மூர்த்தி; பாஹர் ஹை ஈஸ்வர்’ என்று ஊழி ஏப்பமிட்டு கனிவாகச் சிரித்தான்.   கங்கையில் மிதக்கவிடப் பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில் அழியாச் சுடர்களைப் பார்த்தேன் அப்போது.  சுகுமாரன் நன்றி - கனலி

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.20% ஆக உயர்வு

  இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.20% உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட  செய்திக் குறிப்பில்: நாட்டில் கரோனா பாதித்து குணமடைவோர்...

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் தனியார்...

தமிழ்நாடு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் காலமானார்!

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நீண்டகால நண்பர் சுந்தர்ராஜன். தேமுதிக துவங்கியபோது கட்சியின் முதல் பொருளாளராக சுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டிருந்தார்....

டாக்டருக்கு கொரோனா எதிரொலி: மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை

  கன்னிவாடியில் பயிற்சி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களின் நலன்கருதி மருத்துவமனை வளாகத்தில் மரத்தடியில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கன்னிவாடியில் 30 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 6 டாக்டர்கள் மற்றும் நர்சுகள்...

தமிழ் நாட்டில் தீவிரம் காட்டிவரும் கொரோனா; ஒரே நாளில் 4ஆயிரம் பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை...

பிந்திய செய்திகள்

தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்

சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு...

‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணையும் அதர்வா

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு...

‘கமட பிட்டியக்’ தேசிய திட்டம் அறிமுகம்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'கமட பிட்டியக்' தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதன் அங்கூரார்ப்பண...

திரிமான்ன, தனஞ்சயவின் அடுத்த கட்ட நடவடிக்கை

இடது கை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டிசில்வாவும் மார்ச் 07 ஆம் திகதிக்குள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஏனைய இலங்கை அணி...

‘ஊய்குர் முஸ்லிம்கள்’ பற்றிய கதையாடல்களுக்கு சமூக ஊடகங்களில் சீனா விதிப்பு

சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிராக நடந்து வரும் மனித உரிமை மீறல் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக சார்பு போராட்டங்கள் போன்ற விடயங்களை மையப்படுத்திய அரசியல் தலைப்புகளைப் பற்றி...
- Advertisement -