தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் நுண்மையான பார்வையைக் கொண்டவர். தமிழ் தேசிய ஈடுபாடு மிகுந்த தி. செல்வமனோகரன், துண்டி என்ற கலை இலக்கிய இதழின் ஆசிரியருமாவார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிந்த இவர், தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். தூண்டி கலை இலக்கிய வட்டத்தின் மூலம் பல்வேறு ஆய்வரங்குகளை நடாத்திய இவர், எஸ். பொ. எனப்படும் எஸ். பொன்னுத்துரை மற்றும் முத. தளையசிங்கம் தொடர்பில் முன்வைத்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. தமிழர்களின் பண்பாடு, அடையாளம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டும், ஊக்குவித்தும் வருபவர். விமர்சனச் செயற்பாடுகளுடன், பதிப்பு முயற்சிகளும் இவரது மற்றுமொரு முக்கிய பணியாகும். பழந்தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்தும் வருகின்றார். “காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்” , “சொற்களால் அமையும் உலகு” “தமிழில் மெய்யியல்” என்பன இவரது நூல்களாகும். உரிமை பத்திரிகைக்கு செல்வமனோகரன் வழங்கிய நேர்காணல் இது தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர்.