Thursday, January 28, 2021
- Advertisement -

TAG

பா .உதயன்

காதல் கொண்டேன் காவியமே: பா.உதயன் கவிதை

  கண்ணே நீ என் அருகிருந்தால் கனவென்றொன்று வருவதில்லை என் கண்ணில் உந்தன் நினைவிருந்தால் கண்கள் என்றும் நனைவதில்லை   என்னோடு உந்தன் முகம் இருந்தால் எனக்கு என்றும் தனிமை இல்லை என்னுள் உந்தன் உயிர் இருந்தால் எந்தன் மூச்சு நிற்பதில்லை   ஊரும் நதி போல் நீ இருந்தால் என் உள்ளத்தின் ஈரம் காயாது தூவும் மழையாய் நீ வந்தால் துன்பம் கூட விலக்குமடி   வானில் நிலவாய் தெரியுதங்கே உன் வட்ட முகத்தின் ஒளி அழகு காலை வந்த பூக்களிலும் கண்டேன் உந்தன் கவி அழகு   அழகே தமிழே என் மொழியே அந்த நதியில் துயிலும் வெண் நிலவே என் கவியில் உயிர்த்த கற்சிலையே காதல் கொண்டேன் காவியமே.   பா.உதயன் ✍️

கவிதை | அஞ்சற்க மனிதா | பா.உதயன்

இருண்டு கிடக்கும் உலகம் மெளனங்களோடு மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது அதன் அழகிய மொழிகளை தொலைத்து விட்டு ஒளிந்து கொள்ள இடம் தேடியபடி மனிதன் அலைகிறான் அவன் இசைத்த பாடல்களை எல்லாம் திண்டு கொண்டிருக்கின்றன கண்ணுக்கு தெரியாத வைரசுகள் பறவைகள் பாடவில்லை பூக்கள் பூக்கவில்லை காலை ஒரு கணம் விடிய மறந்தது காலம் தெரியாமலே மரங்களில்...

கவிதை | அம்மா | பா.உதயன்

கல்லிலும் தெய்வம் கண்டேன் உன்னிலும் தெய்வம் கண்டேன் உன்னிலில் கண்ட தெய்வம் உயிருக்குள் நின்றதம்மா உன்னிலே என்னைக்கண்டேன் கல்லிலே உயிர்த்திருக்கும் கடவுளாய் உன்னைக்கண்டேன் கடவுளை விடவும் பெரிது கருவிலே சுமந்த தெய்வம் கண்ணுக்குள் மணியைப்போல உன்னுக்குள் என்னை வைத்தாய் உலகிலே உன்னை விட உயர்ந்தது எதுகும் இல்லை வானிலே நிலவு போல என்...

கவிதை | நான் பேசத்தெரிந்த மனிதன் | பா.உதயன்

நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என்...

கவிதை | மொழி | பா. உதயன்

காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட...

படமும் கவிதையும் | நிலம் | பா.உதயன்

எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .

கவிதை | நதி ஒன்று துயில்கிறது | பா .உதயன்

அமைதியாய் துயிலும் நதியும் அழகே அதன் அருகினில் பாடும் மலையும் அழகே காலையும் அழகே மாலையும் அழகே காலங்கள் சொல்லும் இயற்கையும் அழகே பறவைகள் பாடும் மொழியும் அழகே கடல் அலை பாடும் கவியும் அழகே காலையில் பூத்திடும் பூக்களும் அழகே அந்த பூவினில் தெரியும் புன்னகை அழகே சிட்டு குருவியின் சிரிப்பு ஒலி போலே சிரித்திடும் குழந்தையின் சிரிப்பொலி...

எப்படி மறப்பாள் | பா .உதயன்

தூங்கும் போதும் தூங்கி எழும்பும் போதும் எல்லா நேரமும் எப்பவும் இவளுக்கு இவள் மகன் நினைப்புத்தான் ஊர் உறங்கி கிடந்த மாலை ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துப்  போனார்கள் அன்று போனவன் போனவன் தான் இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு இன்று  இவள் ஊரின் அம்மன் தேர்...

மனக்குரங்கு | பா .உதயன்

கால் நீட்டி குந்தி இருந்தபடி கட்டளை இடுகிறது என் மனக்குரங்கு அதை கட்டிப்போட்டு சும்மா இரு என்று சொல்ல நான் என்ன புத்தனா புனிதனா ஆசையும் பாசமும் கொண்ட அந்த மனக்குரங்கு தானே அது ஆடி அடங்கும் வரையிலிம் எந்தக்கிளை வேண்டுமானாலும் தாவித் திரியட்டும் ஆசையும் பாசமும் அகன்று அந்த ஞானம் அடைந்தவனை அறியும் வரையிலும் இப்போதைக்கு...

பிந்திய செய்திகள்

விசாரணை நாடகம் | கேலிச்சித்திரம்

ஓவியம்- செல்வன் (நன்றி- வீரகேசரி)

ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திறந்து வைத்தார். அதிமுகவின் பொதுச் செயலாளரும்,...

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு!

முன்னதாக ஏலம் நடைபெறுமா என்றே சந்தேகம் நிலவிவந்த நிலையில், தற்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐ.பி.எல். அணிகள்...

பரவக்கூடிய புற்றுநோய்க்குரிய நவீன சிகிச்சை

புற்று நோயாளிகளை,  சாதாரண புற்றுநோயாளிகள் என்றும், பரவக்கூடிய புற்றுநோயாளிகள் என்றும் இருவகையாக வகைப்படுத்தலாம். உடலில் உள்ள உறுப்புகளில் ஏதேனும்...

ப்ரோஜீரியா பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

குழந்தைகளுக்கு ஏற்படும் ப்ரோஜீரியா என்ற இளம் வயதில் முதுமை அடையும் அரிதான நோய்க்கு தற்போது நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
- Advertisement -