நடிகர் விஜயகுமாரின் மனைவியும் பழம் பெரும் நடிகையுமான மஞ்சுளா விஜயகுமார் திடீர் மரணம். சென்னையில் இன்று தனது வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது கீழே விழுந்து கடும் காயம் ஏற்பட்டதனால் மரணமானார். தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதும் பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கணவர் விஜயகுமார் மட்டுமன்றி அவரது அனைத்துப் பிள்ளைகளும் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்கள். நீண்ட சினிமா வாழ்வு வாழ்ந்த இவரது குடும்பத்தில் இவரது திடீர் இழப்பு தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.