April 2, 2023 3:11 am

மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 2மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 2

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

1670ல் மாந்தை சிற்றாலயத்தைச் சேர்ந்த பக்தியுள்ள 20 குடும்பங்கள் ஒன்றுகூடி மாந்தையில் வீற்றிருந்த செபமாலைமாதா சுரூபத்தை பாதுகாக்கும் முகமாக ஆலோசனை செய்துள்ளனர். (Chronical Madhu -28) இதன் பயனாக இவ் 20 குடும்ப அங்கத்தவர்கள் மாந்தையில் நிலை கொண்டிருந்த செபமாலைமாதா சுரூபத்தை ஒல்லாந்தரிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு அதனை எடுத்துக்கொண்டு கால் நடையாக முதலில் கள்ளியட்டைக்காட்டில் சிறிதுகாலமும் அக்காலத்தில் கண்டி இராட்ச்சியத்திற்குட்பட்ட யானை புலி உள்ள அடர்ந்த காட்டினுடாக இராமேஸ்வரத்தில் இருந்து கண்டிக்குச் செல்லும் முன்னைய இராஜ பாதை (தற்போதைய யு14 பாதை) மூலமாக கண்டி அரசனின் சுங்கச் சாவடியென்னும் புராதான குளத்திற்கு அருகேயுள்ள கிராமமொன்றிற்கு (தற்போதைய தட்சணாமருதமடு கிராமம்;) தமது நீண்ட பயணத்தை செபமாலைமாதா சுரூபத்துடன் சென்றடைந்தனர். அதன்பின் 2 கி.மீ தூரத்திலுள்ள மருத மரங்களினால் சூழப்பட்ட சிறிய குளக்கரையைக் கொண்ட மருத கிராமத்திற்கு சுரூபத்தை எடுத்துச்சென்று வணங்கினர்.

 

அங்கு மாந்தையின் பரம்பரை கிறீஸ்தவர்கள் முதல்முறையாக திருச்சிலுவையை நட்டு செபமாலைமாதா சுரூபத்தை வைப்பதற்காக ஓலைகளினால் வேயப்பட்ட சிறு கொட்டிலை அமைத்து தமது வேதவைராக்கிய வித்தை விதைத்ததாக அறியப்படுகின்றது. (ஞானப்பிரகாசியார் 225 மடு-272-276) அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பட்டணத்தில் வேதகலாபனை காட்டுத்தீ போல் நாலா பக்கமும் பரவிக்கொண்டிருக்க யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து வேதத்தில் வைராக்கியம் நிறைந்த கிறீஸ்தவ மக்கள் இடம்பெயர்ந்து சுமார் 700 கிறீஸ்த்தவர்கள் பூநகரிகடல் ஏரியைக் கடந்து வன்னிக் காட்டில் நுழைந்து புதுமையான விதத்தில் செபமாலை மாதாவின் சிறுகுடிலை நோக்கி தேவனால் அழைத்து வரப்பட்டனர். யாழில் இருந்த ஏழு இந்தியக் குருக்களும்இ 700 கிறீஸ்த்தவர்களும்இ பூநகரி கடல் ஏரியைக் கடந்து காட்டு வழியாக நடந்து மன்னாரிலுள்ள மடுத்தேவாலயத்தை வந்து சேர்ந்ததாக சான்றுகள் உள்ளன. (Codex Madhu 1968 இல்) கானகத்தின் நடுவே அமைதியும் சமாதானமும் நிறைந்த மருதமடு; செபமாலை மாதாவின் பாதகமலங்களில் மாந்தை கிறீஸ்தவர்கள் அமைதியாக ஒவ்வொரு இரவும் செபமாலையை கரங்களில் ஏந்தி தம்மைக் காப்பாற்றுமாறு மாதாவை வேண்டினர்.

 

இவர்கள் மத்தியில் ஓர் போர்த்துக்கேய தளபதியின் மகளான லேனா என்பவளும் வந்திருந்தாள் இவள் கிறீஸ்துவின் மேல் அலாதியான பக்தியும் ஏனையோருக்கு முன்மாதிரியுமான சீவியத்தையும் வாழ்ந்து வந்தவள். யாழ் கிறீஸ்தவர்கள் இவளை “சந்தலேனா” அல்லது “அர்ச்சேஸ்ட லேனா” என அழைத்து வந்தனர். யாழ் கிறீஸ்தவர்களும் மாந்தை கிறீஸ்தவர்களும் கானகத்தின் நடுவே தேவனின் அருளினால் ஒன்று சேர்க்கப்பட்டதை நாம் வாழ்நாளில் கண்ட பரவசம் என அக்கால கிறீஸ்த்தவர்கள் அறிவித்தார்கள். (Chronical Chapter -31-32)

 

காலகதியில் லேனா எனப்படும் அப்பெண் மடுவில் இருந்த சுங்க அதிகாரியை மணம் புரிந்ததால். இவள் மாதாவின் பெயரால் தமது செல்வாக்கை பாவித்து மருதமடு மாதாவிற்கு சிறு கோவிலைக் கட்டுவித்தாள். வங்காலையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் அந்தோனியோ டீ மெலோ மடுக்கோயில் சம்பந்தமான வழக்கில் (வழக்கு இல.6871 ) – 1875 இல் சாட்சியம் பகர்கையில் லேனா என்பவள் மடுக்கோவிலைக் கட்டியதாக இவர் சாட்சியம் கூறியுள்ளார். (The Cronicle of Madhu chapter IV page 32 – first para) இச்செயலுக்காக அக்காலத்து கிறீஸ்தவர்கள் அவ்விடத்தை “சீலேனா மருதமடு” என்று அழைக்கலாயினர். அது இந்நாள் வரைக்கும் இப்புனித பூமிக்கு ஓரு பெயராக விளங்கி வருகின்றது. கானகத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வருகையை தொடர்ந்து அதன் சுற்று வட்டத்தில் விச சர்ப்பங்களின் தீண்டுதல்கள் வெகுவாக குறைவடைந்தன. காலப்போக்கில் மடுமாதாவின் தலத்து மண்ணை மக்கள் நம்பிக்கையுடன் எடுத்துச் சென்று தமது தீராத நோய்களை தீர்த்ததாக சரித்திரம் சொல்கின்றது. இச்செயல் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது.

madu front

வண பிதா றோமமிஸ் கிர்ச்சென்; (Rev.Fr.Rommess Kirchen) 1931 இல் எழுதிய புத்தகத்தில் கோவாவைச் சேர்ந்த ஓர் பரிசுத்த சுவாமி மடுக்கோவில் வளவில் புதைக்கப்பட்டதாகவும் அவரை கிறீஸ்த்தவர்கள் “சம்மனசு சுவாமி” என அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் பரிசுத்தமான வாழ்க்கையினால் அவர் வாழும்பொழுதே மக்கள் அவரை புனிதர் என அழைத்தனர். இவரை புதைத்த இடத்தின் மண்ணை பக்தர்கள் எடுத்துச்சென்று தமது குரோத வியாதிகளுக்கு மருந்தாக பாவித்தார்கள். 1697–1721 காலத்தில் வணபிதா பெற்ரோ பிராடோ (Rev.Fr.Bedro Frerdo) முதல் முறையாக இம்மண்ணை ஆசீர்வதித்ததாக ஏடுகளில் (Cronical Madhu Page- 36)குறிப்பிடப்பட்டுள்ளது.

1656 தொடக்கம் 1686 வரை டச்சுக்காரரின் கொடுங்கோல் ஆட்சியினால் இலங்கையில் குருக்கள் ஒருவரும் இருக்கவில்லை. அக்காலத்தில் விசுவாசமுள்ள பொது நிலையினரே வேதத்தை வளர்த்து வந்தனர். 1686 இல்; கோவாவில் இருந்து கடல் வழியாக பிரயாணம் செய்தபோது யோசவாஸ் எனும் குருவானவர் பயணம் செய்த படகு புயலில் அகப்பட்டு மன்னார் சவுத்பார் கரையை அடைந்தது.

 

இலங்கையில் வேதகலாபனை நடந்ததினால் அவர் பிச்சைக்கார வேடம் பூண்டு நம்பிக்கையுள்ள கிறீஸ்த்தவ வீடுகளில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னுடன் பூசைக்கல்லையும் நற்கருணைப் பாத்திரத்தையும் எடுத்துச்சென்றார். (வண.பிதா கி. பெரேரா எழுதிய ஜோசவாஸின் சுயசரித்திரம் பக்-44-47 47 Cronical Madhu Page -87) அருளாளர் ஜோசவாஸ் அடிகளார் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் செல்லும் வழியில் மடுத்திருத்தலத்தில் வாழ்ந்த மாந்தைக் கிறிஸ்தவர்களைச் சந்தித்து ஓரு வருடகாலத்திற்கு மேல் அவர்கள் மத்தியில் பணியாற்றி சென்றுள்ளார்.

 

தியானயோக சம்பிரதாய ஓறேட்ரோரியன் சபையைச் சேர்ந்த அருளாளர் யோசப்வாஸ் அடிகளாரைத் தொடர்ந்து சில தியான சம்பிரதாய குருக்களும் கோவையிலிருந்து இலங்கைக்கு வந்து சில கத்தோலிக்க பங்குகளை ஆரம்பிக்கத் தொடங்கினர். 1695 இல் இலங்கைக்கு வந்த பேதுரு பெற்றாஸ் என்னும் குருவானவர் மடுவிற்கு பொறுப்பாளராக இருந்தார் வணபிதா யோசப்வாஸ் 28-02-1697 இல் வணபிதா பெற்றோ பிராடோவை மாதோட்ட பங்கிற்கு (மன்னார் வன்னி பூநகரி யாழப்பாணம்) பொறுப்பாக நியமித்தார். இவரின் காலத்தில் (Devil worshipers) சாத்தானுக்கு உயிர்களை பலிசெலுத்தும் மூடப்பழக்கவழக்கம் நிலவிவந்தது. இவ்மூடச்செயலை வணபிதா பெற்றோ பிராடோ முறியடித்து கத்தோலிக்க விசுவாசத்தை வளர்த்தார். (ஒரோட்டோரியன்; பக்-10 வணபிதா பெற்றோ பெராடோ பக்-100 Cronical madhu  பக்-47)

_46215025_madhu1_big (1)

முதல் தடவையாக 1705 ஆவணி 8 ஆம் திகதி ஆயிரக்கணக்கான மடு யாத்திரியர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மடுத்திருவிழாவில் கலந்துகொண்டனர்இ வணபிதா ஜோசவாஸ் தலைமையில் திருப்பலிப்பூசை நடைபெற்றது. அதன்பின் எட்டு குருக்கள் ஒன்றுகூடி ஆவியின் வேண்டுதலின் பின் இலங்கையின் திருச்சபையை எட்டாக பிரித்து அதை நிர்வகிக்கும் பொறுப்பை எட்டுக் குருக்களுக்கு கையளித்தனர். இதில் ஒன்றாக வண பிதா. பெற்ரோ பெராடோ என்பவர் சீலேனா மருதமடுவிற்கும்இ சகல மாதோட்ட மறைமாவட்டத்திற்கும் பொறுப்பை எற்றுக்கொண்டார். (பரப்பாங்கண்டல் பெரிய கோவிலை மையமாக கொண்ட கிராமங்களுக்கு) மேலும் வண. பிதா. ஜோக்கிம் கொண்சல்வாஸ் (Rev.Fr.Jochime  Gonsalvaz) மன்னார், அரிப்பு, முசலி, இலுப்பைக்கடவை ,புளியங்குளம், கோவில்குளம், தம்பட்டமுறிப்பு, வண்ணாகுளம், பல்லவராயன்கட்டு, இலுப்பைக்குளம், ஆவரங்குளம், அதனோடு அண்டியள்ள கிராமங்களுக்கும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். (Chronicale – Catholial in Jaffna. Rev. Fr. S  ஞானப்பிரகாசியார்). 16-01-1711 இல் ஓரு வெள்ளிக்கிழமை இரவு வண.பிதா. ஜோசவாஸ் தனது 61 வது வயதில் கண்டியில் காலமானார் இவர் வகித்த தலைமைப் பொறுப்பிற்கு வண. பிதா. ஜோசப் மென்சிஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

 

ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததும் இலங்கை கத்தோலிக்கர்களுக்கு விடிவு காலம் ஆரம்பமாகி வேதகலாபனைகள் சற்று ஒழிந்து கத்தோலிக்க மதம் மீண்டும் தளைத்தோங்கத் தொடங்கியது. இலங்கையின் நாலாபுறத்திலும் இருந்து கானகத்தில் வீற்றிருக்கும் மருதமடு அன்னையை காண பலபக்தர்கள் நூற்றுக்கணக்கில் வரத்தொடங்கினர். கோவிலில் இடமின்மையை கண்ணுற்ற மன்னார் வழக்காடு கோட்டில் (நீதிமன்றில்) சக்கிடுத்தாராகவிருந்த பறங்கியரான மோஜீஸ் என்பவர். 1823 இல் ஒரு சிறுகுடிசைக் கோவிலை களிமண்ணினால் கட்டிவித்தார் இது குதிரை லாடன் வடிவத்தில் மூன்று பக்கச் சுவர்களுடன் 8 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் நடுவே பீடத்திற்காக ஒரு சிறுமேசை அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு பின்புறத்தில் குருமாருக்கென சிறு அறை இருந்தது.

சிறிது காலத்தின்பின் இந்தியாவிலுள்ள கோவை குருமாரின் சபை கலைக்கப்பட்டு கிறீஸ்தவ மதம் வளர்ச்சி குன்றியது. சுமார் 300 அண்டுகளாக இலங்கைத் திருச்சபை இந்தியாவிலுள்ள கொச்சின் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1834-12-03ம் திகதி 16ம் கிறகோரி பாப்பாண்டவரினால் இலங்கை திருச்சபை கொச்சினில் இருந்து பிரிக்கப்பட்டு தனிமறை நாடாக பிரகடனப்படுத்தப்பட்டு ஒரட்டேரியன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

278

கோவாவில் இருந்து வந்த வண.பிதா பிரான்சிஸ் சவேரியார் இலங்கைக்கு முதலாவது விக்கார் அப்போஸ்த்தலிக்கராக நியமிக்கப்பட்டார். இவர் கிறீஸ்த்துவிற்கு சாட்சியாய் பெரும் சவாலுடன் இலங்கையில் சேவை புரிந்து இறுதியில் 1835 இல் காலமானார். 1823 இல் திரு மொய்ஸ் மன்னார் நீதிமன்ற முதலியார் களிமண்ணினால் ஆன சிறுகோவிலைக் கட்டினார்.

 

இதன் ஆவணங்கள் நொச்சிகுளம் மாதா கோவிலில் உள்ளதாக அறியப்படுகின்றது. மக்கள் தங்குவதற்காக வதிவிடம் ஒன்றிற்கு 9-6-1828 அடிக்கல் நாட்டப்பட்டது. பாலம்பிட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கல்லினால் 1903 இல் வண.பிதா ஓலிவ் அவர்களினால் குருக்கள் தங்குவதற்கு அறையும் குசினியும் கட்டப்பட்டது. Rev.Fr. Goden முதலாவது கிணற்றைக் கட்டினார். Rev.Fr. Gour 2 வது கிணற்றைக் கட்டினார். Rev.Fr. Massit சிறிய தேவாலயத்தைக் கட்டினார். அங்கு எழுந்தேற்றம் பண்ணி வைக்கப்பட்டது. கோவிலுள்ள மரத்தாலான தூண்கள் மாங்குளம் காட்டிலிருந்து திருகோணமலை வீதி வழியாக கொண்டுவரப்பட்டது. ஆதில் இரண்டு பலா மரங்களும் மூன்று முதிரை மரங்களும் ஏனையவை பாலை மரங்களாகவும் இருந்தன. மாதாவின் கெபி கட்டுவதற்கு நீர்கொழும்பைச் சேர்ந்த திருமதி லூமிஸ் என்பவர் முதலில் பண உதவி செய்திருந்தார். (xxv years Catholic progress madhu and vanni parish page 272 – 276).

அதன்பின் வண.பிதா ஜோசவாஸ் முனிந்திரர் இலங்கையின் விக்கார் ஜென்றலாக நியமிக்கப்பட்டார். இவரின் அயராத முயற்சியினால் மேலும் ஜந்து மிசனரி குருக்கள் கோவாவில் இருந்து 14-07-1705 இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் வண பிதா ஜோசப் டீ. ஜேசு மேரி வண பிதா ஜேகம் கொண்சல்வாஸ் வண பிதா மானால் டீ. மிராண்டா வண பிதா மைக்கல் டீ. மெலோ வண பிதா பிரான்சிஸ்கோ டீ. யேசு. வண. பிதா ஜோசவாஸ் இக்குருக்களை ஆரத்தழுவி மடுவில் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். (Chronicale) 1846 இல் இலங்கையின் வடபகுதி விக்காரியமாக (மறைமாவட்டம்) அமைக்கப்பட்டு அதி.வந்த.பெற்றக்கிளி ஆண்டகை விக்கார் அப்போஸ்தலிக்க நியமனம் பெற்றார். இவர் தமக்கு உதவியாக அமலோற்பவ மரியநாயகி சபையாரை அழைத்திருந்தார். இச்சபையைச் சேர்ந்த செமேரியா மேற்றாணியாரால் மடுத்திருப்பதிக்கு அதிக திருத்தங்கள் செய்யமுடியவி;ல்லை. 1868 இல் அக்காலத்து வடமாகாண மறைமாவட்டத்திற்கு அதி. வந்த. பொஞ்சீன் ஆண்டகை நியமிக்கப்பட்டார். இவர் 1870 இல் ஒவ்வொரு வருடமும் ஆடித் திங்கள் இரண்டில் மடு வருடாந்த உற்சவம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார் அன்று தொடக்கம் இன்று வரை ஆடி 2ம் திகதி திருவிழா மடுத்திருப்பதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசியார் தனது சரித்திர ஏட்டில் மடு சேத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் ….

Peter  Mr.Peter Sinclair | Project Consultant & Trainer | மன்னாரிலிருந்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்