முள்ளிவாய்க்காலுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிகள் முடிந்து விட்டது – தம்பர அமில தேரர் முள்ளிவாய்க்காலுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிகள் முடிந்து விட்டது – தம்பர அமில தேரர்

முள்ளிவாய்க்காலுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிகள் முடிந்து விட்டதாகவும்  அவர் தற்போது இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி விட்டு, அலுவலகத்திற்குள் இருக்க வேண்டும் எனவும்  தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல.   நினைவில் வைத்து கொள்ளுங்கள் விளையாட்டு சரிப்பட்டு வராது என்றும்  இது இலங்கை என்பதை நினைவில் வைத்து கொள்ளுமாறும்  கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருந்தார்.  இதன் மூலம் தமிழ் மக்கள் வடக்கில் இருப்பது சிங்களவர்களின் அனுதாபம் காரணமாகவே என்று அவர் சொல்லாமல் சொல்கிறார். அத்துடன் அவரது பேச்சானது வடக்கு இலங்கையின் பகுதியல்ல என்பது போல் உள்ளது.   பாதுகாப்புச் செயலாளர் முள்ளிவாய்க்காலில் பெற்ற வெற்றியினை கொண்டு மாத்திரம் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

முள்ளிவாய்க்காலுடன் அவரது பணி முடிந்து விட்டது என்பதை அவர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.   இதன் பின்னர் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி விட்டு அவர் தனது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். துணியை தூக்கிக்கொண்டு சத்தமிட்டால் சரியாக இருக்காது எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்