வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்க கட்சிகளின் சார்பில் போட்டியிடாத வேட்பாளர்கள் மீதான தாக்குதல் வடக்கில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மீதும் அரச சார்பற்ற சுயேட்சைக் குழுக்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செயற்பட்டுள்ளதாகவும் வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.