கனடா மனவெளி கலையாற்றுக்குழு வழங்கும் பதினாறாவது அரங்காடல்கனடா மனவெளி கலையாற்றுக்குழு வழங்கும் பதினாறாவது அரங்காடல்

மனவெளி கலையாற்றுக்குழு வழங்கும் பதினாறாவது அரங்காடல் , இவ்வருடம் ஒக்டோபர் மாதம் பதின்மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மதியம் 1:00 மணி,மாலை 6:00 மணி என இரண்டு காட்சிகளாக நடைபெறவுள்ளது.
இந்த அரங்காடலில் கே .எஸ் . பாலச்சந்திரனின் ” நதியில் நனைந்த நாட்கள் ” , அதீதா வழங்கும் “ஆதி வர்ணம் கறுப்பு”, அ.புராந்தகன் நெறியாள்கையில் த.அகிலனின் “இருளிலும் தொடரும் நிழல்” , க. நவம் அவர்களின் நெறியாள்கையில் செழியனின் “கடலிலிருந்து கையளவு மேகம் ” ஆகிய நிகழ்வுகளுடன் மெலிஞ்சி முத்தனின் “மண்டைக்கயிறு” என்ற நவீன தென்மோடிக்கூத்து ஒன்றும் மேடையேறுகின்றன.
இம்முறை நாடகங்கள் அனைத்திலுமே போரின் விளைவுகள் , போரிற்குப் பின்னான சமூகத்தின் அவலங்கள், மன உளைச்சல்கள் போன்றவையே பொதுப் பேசு பொருளாக இழையோடி இருப்பதை அவதானிக்க முடியும் என்று மனவெளி கலையாற்றுக் குழு தெரிவித்துள்ளது
மேலும் பார்வையாளர்களின் வசதி கருதி வழமை போலவே இலவச குழந்தைகள் பராமரிப்பு ஒழுங்குகளும் செய்யப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பதினாறு வருடங்களாக கனடாவில் அரங்காடல் நிகழ்வுகளை தொடர்ந்து நடாத்தி தமிழர் நாடகக் கலையை அழிய விடாது வளர்த்து வருவதில் மனவெளி கலையாற்றுக்குழு முக்கிய பங்கினை ஆற்றிவருகின்றது.

ara-1

ara3

ara

ஆசிரியர்