மாம்பழ ஜுசில் குட்டிப் பாம்புமாம்பழ ஜுசில் குட்டிப் பாம்பு

திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாஜிவ் என்பவர் கடையில் தனது இரண்டரை வயது மகளுக்காக ஒரு பிரபல குளிர்பான நிறுவனத்தின் அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட மாம்பழ ஜூஸ் வாங்கினார். அவரது மகள் அந்த குளிர்பானத்தை குடித்துக்கொண்டிருந்தபோது உள்ளே ஏதோ தடிமனாக இருப்பதை உணர்ந்தாள்.

இதுபற்றி அவள் தனது பாட்டியிடம் கூற, அவர் அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே ஒரு குட்டிப்பாம்பு அழுகிய நிலையில் இருந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை மயக்கம் வருவதாக தெரிவிக்க அவளை உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி சாஜிவ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த குளிர்பானமும் தேதி காலாவதியாகி இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சிற்றுண்டிச்சாலையில்; விற்பனை செய்யப்பட்ட உணவு பொதியில்; செத்துப்போன விரியன் பாம்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஆசிரியர்