சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோ செல்லவிருந்த விமானமொன்றில் விச பாம்பு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு 370 பயணிகளை ஏற்றிக்கொண்டு குவான்டாஸ் விமானம் ஒன்று செல்லவிருந்தது. இந்த விமானத்தில் சுமார் 8 இன்ச் நீளமுடைய பாம்பு இருந்ததை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் தகவல் அளித்ததை அடுத்து அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த அனைத்து பயணிகளுக்கும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அந்த விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பாம்பைக் கண்டடு பிடித்து அகற்றிய பின்னர் தான் மீண்டும் பயணம் ஆரம்பித்தது.