தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இனி எவரும் இனவாத அரசியல் நடத்த முடியாது : மனோ கணேசன் தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இனி எவரும் இனவாத அரசியல் நடத்த முடியாது : மனோ கணேசன்

கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும், நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும், சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம்.
ஒருபக்கம் தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி, மறுபுறம் சிங்கள மக்களுக்கு 13ஆம் திருத்தம், மாகாணசபை முறைமை, அதிகார பகிர்வு கொள்கை ஆகியவை பற்றி திரித்து பேசி பொய்யான தகவல்களை வழங்கி தங்கள் இனவாத அரசியலை ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பொதுபல சேனா, இராவணா சேனா ஆகிய அமைப்புகளின் இனவாத கூட்டு நடத்தி வருகின்றது. இந்த கூத்துகளை நாம் நடத்தும் எமது அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் மூலமாக படிப்படியாக முறியடித்து வருகின்றோம்.

எனவே பழைய இனவாத வரலாற்றை தலைநகரிலும், நாட்டில் எந்த பகுதியிலும் இனி எவரும் திரும்பவும் எழுத முடியாது. நாம் வந்த வழியில் திரும்பி மீண்டும் பயணிக்கவும் முடியாது. அதற்கு என் உயிர் போனாலும் இடந்தரமாட்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்

ஆசிரியர்