சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | வரலாறு என்றால் | பகுதி -1சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | வரலாறு என்றால் | பகுதி -1

வரலாறு என்றால் என்ன?? என பலருக்குத் தெரிந்துதான் இருக்கும். இருந்தாலும் தெரியாத என் போன்றவர்களுக்காக அதுபற்றிய சிறு அறிமுகத்தை இங்கு தர முயல்கிறேன்.

ஒரு இனத்தின் பதிவுகள் எங்கு அடையாளப் படுத்தப்படுகிறதோ அல்லது பதியப்படுகிறதோ அதுதான் வரலாறு.

• நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் எழுதுவது.

• மற்றவர்கள் ஆராய்ந்து எழுதியதை வாசித்து தம் அறிவைப்  பயன்படுத்தி ஆராய்ந்து எழுதுவது.

• தொல்லியற் சான்றுகளினூடாக ஆய்வுசெய்து எழுதுவது என்பன வரலாற்றுப் பதிவாகின்றன.

 

எதைப்பற்றி எழுதுவது வரலாறு?

ஒரு நாடு, இனம், மொழி, பண்பாடு, தனிமனிதன், தலம், பொருள், போர் எனப் பல இருந்தாலும், முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனித இனம் தோன்றிப் பரவிப்  பெருகி அழிந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த இனங்களின் பழைமை, தொன்மை, நாகரிகம், வாழ்வியல் என்பவற்றை எழுதுவது வரலாறு.

வரலாற்றை ஆதாரங்களுடன் எழுதப் பயன்படுபவை: அகழ்வாய்வுகள், மண்படைச் சரிதவியல், கல்வெட்டுக்கள், மட்பாண்டச் சரிதவியல், ரேடியோ கார்பன் ஆய்வு 14, மரபுயிரியற் சோதனை, கல்லறைகள், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவை.

dna-forensic_2070437b

 

மண்படைச் சரிதவியல்:

மண்ணை அகழ்ந்து மண்ணின் படிமான நிலையிலிருந்து காலத்தைக் கணக்கிடல்.

ஒவ்வொரு தொகுதி படிமமும் 100 ஆண்டுகளைக் குறிக்கும்.

 

கல்வெட்டுக்கள்:

கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துகளினூடாக காலத்தையும் வரலாற்றையும் அறிதல்.

 

மட்பாண்டச் சரிதவியல் – வெப்பேற்றுவியல்:

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் உள்ள சித்திரங்களையோ அன்றி எழுத்துக்களையோ வாசித்துக் காலத்தைக் கணிப்பது.

அவற்றில் ஒட்டியிருக்கும் றேடியோ துகள்களின் அடர்த்தியைக் கொண்டு அப்பொருளைச் சூடாக்குவதன் மூலம் அதன் காலத்தை அறிதல்.

 

றேடியோ கார்பன் 14:

ஒரு உயிரினத்திலுள்ள கார்பன் 12 அவ்வுயிரினம் அழிந்தாலும் மாறாது. ஆனால் கார்பன் 14காலம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டு செல்லும்.

5000 ஆண்டுகளில் அரைவாசியாகக் குறைந்துவிடும்.

 

மரபுயிரணுச் சோதனை (DNA):

உயிருடன் இருக்கும் மனிதர், விலங்கு போன்றவற்றிலும் இறந்துபோன உயிரினங்களிலும் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருந்த உடலங்கள் எலும்புகள் போன்றவற்றிலும் செய்யப்படும் ஆய்வு.

இவை ஆண்களின் Y குரோமோசோம்களினுடாகவே இலகுவாக நிறுவப்படுகின்றன.

carbon2

 

குரோமோசோம் – மரபுயிரணு – DNA:

முதல் மாந்தர்   M-30

ஒஸ்ரொலொயிட்  M-30

இலங்கை வேடர்   M-30

தென்னிந்தியத் தமிழர்  M-20

ஈழத் தமிழர் M-20

சிங்களவர்  M-20

இந்தோ ஆரியர் M-17

தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் M-20

சுமேரியர் ?????

 

• இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் கோமோ    சப்பியன்ஸ்.

• மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றிப் பரவியது.

• உறைபனி காலத்திலும் மாந்தஇனம் வாழ்ந்தது.

• கிட்டத்தட்ட 50000 வருடங்களுக்கு முன்னர் இடப்பெயர்வு ஆரம்பித்தது.

• இடம்பெயர்ந்தோர் தங்கிய இடங்களின் காலநிலைகளுக்கேற்ப அவர்களின் நிறமும் உருவங்களும் மாற்றம் பெற்றன.

• ஓரினம் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருந்தால் அவர்களின் உருவம், நிறம் என்பன மாற்றமடையும்.

 

தொடரும் …

 

Nivetha   நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்..

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)

 

ஆசிரியர்