5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரின் சந்ததி கண்டுபிடிப்பு5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரின் சந்ததி கண்டுபிடிப்பு

கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் சந்ததியினர் 19 பேர் தற்போது அவுஸ்திரியா நாட்டில் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கடந்த 1991ல் இத்தாலி நாட்டின் டைரோல் மலைப் பகுதியில் பனியில் உறைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆய்வில் அது 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடல் என தெரியவந்தது.

அதிலிருந்து அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் குறித்து தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்பதால் அதன் மீது ஏகப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வாளர்கள் அந்த மனிதருக்கு ´ஓட்சி பனிமனிதன்´ எனவும் பெயரிட்டனர். ஆய்வுகளின் ஒரு பகுதியாக முழு மரபணு தகவலும் சேகரிக்கப்பட்டது. அந்த தகவல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன.அதில், ´ஓட்சி´யின் மரபணுவில் ஒரு சடுதி மாற்றம் இருந்ததாக தெரியவந்தது. இத்தகைய மாற்றங்கள் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தட்பவெப்பம் உள்ளிட்ட சூழல்களால் அங்கு வசிப்பவர்களிடம் உருவாகின்றன.அதனால் அவை பண்டைய மக்களின் இடப்பெயற்சிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பயன்படுகின்றன.

அதன் அடிப்படையில் ஆஸ்திரியா நாட்டின், டைரோல் பகுதியில், 3,700 பேரின் மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.அதில், 19 பேருக்கு ´ஓட்சி´யின் மரபணு சடுதி மாற்றம் இருந்ததாக தெரியவந்தது. ஆய்வாளர்களின் கணிப்பு படி, அவர்கள் ´ஓட்சியின்´ சந்ததியினர் அல்லது சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். இதே ஆய்வை இத்தாலியில் உள்ள டைரோல் பகுதியிலும் மேற்கொள்ள முடிவாகி உள்ளது.இதுவரை நடந்த ஆய்வுகளில்…

மலைகளில் சுற்றித்திரியும் வேடுவர் அல்லது ஆடு மேய்ப்பவர்.

45 வயதில், கொடூரமான முறையில் தாக்கப்பட்டு காலமானார்

வயிற்றில், 30 வகையான பூக்களின் மகரந்தங்கள் இருந்ததால், வசந்த பருவத்தில் இறந்திருக்கலாம்

தாமிரத்தால் ஆன கோடரி வைத்திருந்தார்

கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன.

பித்தப்பையில் 3 கற்கள் இருந்தன

கடைசியாக சாப்பிட்டது, காட்டு வகை கோதுமை கஞ்சி, இறைச்சி மற்றும் சில காய்கறிகள்

உடலில் 50 இடங்களில், மரக்கரியை வைத்து, பச்சை குத்தியிருந்தார். இவை வலி நிவாரணத்திற்காக செய்யப்பட்டு இருக்கலாம். இவ்வாறு, ஆய்வுகளில் தெரியவந்து உள்ளது.

ஆசிரியர்