செலுத்துகின்றோம் அஞ்சலி தலை வணங்கி….செலுத்துகின்றோம் அஞ்சலி தலை வணங்கி….

மாவீரர் நாள் | தேசிய நினைவெழுச்சி கொள்ளும் நாட்கள், உயிரை உருக்கி விழிகளை நனைத்து கணங்கள் கரைகின்றன. தேசப்புதல்வர்களுக்கான சிறப்புப் பதிவு …

மாவீரர் நாள்

வீரனாய் களத்தில் வெந்த வேங்கையே

மறவனாய் எதிரியை அழித்த வேந்தனே

குருதியில் தோய்ந்து போன எம்மினத்தை

காப்பதற்காய் உன் உயிரை எரித்தாயே!

கல்லறையில் கலந்து விட்ட உன் தியாகம்

வரலாறாய் எழுந்து நிற்கும் வானுயர –

செந்தமிழின் பதிவேட்டில் உமை வாழ்த்தி

செலுத்துகின்றோம் அஞ்சலி தலை வணங்கி….

– பாஞ்சாலி –

ஆசிரியர்