சென்ற மகன் திரும்பவில்லை – இன்று வென்ற களம் நிலைக்கவில்லை….. சென்ற மகன் திரும்பவில்லை – இன்று வென்ற களம் நிலைக்கவில்லை……

தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பு பதிவு….

 

வீரத் தாய் 

 

தாயின் விழியில் வழியும் துளிகள்

கல்லறை மீது பட்டுத் தெறிக்க

நெஞ்சுக் குழிக்குள் குமுறிய சோகம்

நஞ்சாய் எகிறி உடம்பில் பரவ……

 

நினைத்துப் பார்த்தது தாயின் மனம்

மகன் சொன்ன வார்த்தைகளை………

 

“கலங்காதே எனை சுமந்தவளே!

ஈரெட்டு வயது என்று

தடுக்க நீ நினைக்காதே!

கால்கட்டு போட்டு எனை

வீட்டுக்குள் பூட்டாதே!

தாயே!

உன் மடியில் உறங்கியது போதும்

பகைவர் பிடியில் வேகுது எம் தேசம்!

இலட்சியம் வென்று நாளை வருவேன்

காத்திரு தாயே அதுவரை –

ஆயிரம் அம்மாக்களில் நீயும் ஒருத்தியாய்…..”

 

சென்ற மகன் திரும்பவில்லை – இன்று

வென்ற களம் நிலைக்கவில்லை

 

களத்தில் மடிந்த கண்மணி – இன்று

கல்லறை உள்ளே தூங்குகிறான்

 

கண்ணீர் பூக்களால் வாழ்த்துகிறேன்

ஆயிரம் அம்மாக்களில் நானும் ஒருத்தியாய்…….

 

– கயல்விழி –

ஆசிரியர்