சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று மதியம் 3மணிக்கு நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளதாகவும், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுக பாடுபடும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுக்க, முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..