சென்னையில் கடந்த 10ம் திகதி தொடக்கம் 22 ம் திகதி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 37 வருடங்களாக இடம்பெறும் இந்த புத்தகக் காட்சி அரங்கு இன்று மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெறுகின்றது.
லட்சக்கணகான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெருமளவு மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த ஆண்டு பெருமளவான ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான ஈழத்து புத்தக ஆர்வலர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.