மேம்பாலமொன்றை அமைக்கும் முயற்சிகளால் அதன் கீழுள்ள புகையிரத பாதையினூடான போக்குவரத்துகள் பாதிக்கப்படுவதை தடுக்க சீன பொறியியலாளர்கள் முன்னோடி நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் புகையிரத பாதைக்கு மேலாக செல்லும் 17000 தொன் நிறையுடைய இராட்சத மேம்பாலப்பகுதியை புகையிரத பாதைக்கு சமாந்தரமாக நிர்மாணித்த பின் அதனை 90பாகை கோணத்தில் திருப்பி பிரதான மேம்பாலத்துடன் இணைத்துள்ளனர்.
மத்திய சீனாவிலுள்ள வுஹான் நகரில் அதிவேக புகையிரதப் பாதைக்கு மேலாக இந்த மேம்பாலப் பகுதிக் கட்டமைப்பு பொறியியலாளர்களால் புதன்கிழமை 90நிமிட செயற்கிரமத்தையடுத்து பிரதான மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டது.
இத்தகைய தொழில்நுட்பம் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.