அதிர்ச்சி விளம்பரம் | தனது மார்பகங்களை வாடகைக்கு விடும் பெண்அதிர்ச்சி விளம்பரம் | தனது மார்பகங்களை வாடகைக்கு விடும் பெண்

rentsign2

பிரான்ஸில் உள்ள ஒரு பெண், ஓரின சேர்க்கையாளர்கள் தத்து எடுக்கும் குழந்தைகளுக்கு பாலூட்ட தன்னுடைய மார்பகங்களை வாடகைக்கு விட தயார் என அதிரடி அறிவிப்பு  ஒன்று செய்துள்ளதால் பாரீஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் அவருடைய அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதை ஓரினச்சேர்க்கையாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஆண்களை ஆண்களும், பெண்களை பெண்களும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. இப்படி இரண்டு ஆண்கள் திருமணம் செய்துகொண்டு, அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிற போது, அவர்களின் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட நான் தயார் என்று ஒரு பெண், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இணைய தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

Alexandre Woog என்பவர் நடத்திவரும் இணையதளத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இது குறித்து Alexandre Woog கருத்து தெரிவித்தபோது, இது சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நடைமுறைதான் என்றும் எனவே வாடிக்கையாளர்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க அந்த பெண்ணை அணுகுவதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஒரு நாளுக்கு, ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட அவர் 130 டாலர் வசூலிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பில் அந்தப் பெண், ‘‘நான் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள ஒரு இளம்தாய். வயது 29. சிசுக்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு எனது மார்பகங்களை வாடகைக்கு விடுகிறேன்’’ என கூறி உள்ளார்.

ஆசிரியர்