கொடிய நோயில் சிக்கிய விஷால்!கொடிய நோயில் சிக்கிய விஷால்!

vishal-in-nsm

விஷால், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘நான் சிவப்பு மனிதன்’. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷால் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

இதனை இயக்குவது இயக்குனர் திரு. இவர், ஏற்கெனவே விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனனும், இன்னொரு நாயகியாக இனியாவும், காமெடியனாக ‘நண்டு’ ஜெகனும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விஷால் ‘நார்கோலெப்ஸி’ எனும் கொடிய நோயால் பாதிக்கப்படும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நோய் வந்தவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென தூங்கிவிடுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகச்சிலரே இந்த உலகத்தில் இருக்கின்றனர். லட்சம் பேர்களில் ஒருவருக்கே இந்த நோய் வருவதாக கூறப்படுகிறது.

கொடிய வகை தூக்க நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விஷால், வில்லன்களால் துரத்தப்படுவதும் அதில் இருந்து அவர் தப்பிப்பதும்தான் கதை. படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

சினிமா ஹீரோக்களுக்கு வியாதி வருவது காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தக்கால படங்களில் வரும் கேன்சரிலிருந்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தில் வரும் மறதி வியாதி என ஏகப்பட்ட நோய்களுக்கு நம்மூர் ஹீரோக்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

ஆசிரியர்